October 25, 2021

தமிழ்நாடு புதிய அமைச்சரவையும் இலாகாக்களும்!

தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் கவர்னர் மாளிகையில் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து மற்ற எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.. அவரது கண்கள் கலங்கியது.
ops
இதையடுத்து பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சரவை இலாகாக்களின் விவரம்::

1.ஒ. பன்னீர் செல்வம், முதலமைச்சர்

பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனத்துறைப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை, உள்துறை, நிதித்துறை, திட்டம், சட்டப்பேரவை, தேர்தல் மற்றும் பாஸ்போர்ட்டுகள், பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், திட்டப்பணிகள்.

2. நத்தம் விஸ்வநாதன், மின்சாரம், மதுவிலக்கு, சுங்கம்

மின்சாரவாரியம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் சுங்கம், மொலாசஸ்.

3. ஆர்.வைத்திலிங்கம், வீட்டுவசதி மற்றும் நர்ப்புறவளர்ச்சி

வீட்டுவசதி, ஊரக வளர்ச்சி, குடிசைமாற்று வாரியம், நகர வடிவமைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் சென்னை மாநகர வளர்ச்சிக் கழகம்

4.எடப்பாடி கே. பழனிச்சாமி , நெடுஞ்சாலைத்துறை

நெடுஞ்சாலை, சுரங்கம், சிறு துறைமுகங்கள்,

5. பி.மோகன், ஊரகத்தொழிற்துறை, தொழிலாளர் நலன்

மக்கள்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, செய்திக்கான அச்சுக்காகித கட்டுப்பாடு, மக்கள்தொகை கணக்கெடுபபு, நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு

6. பி.வளர்மதி, சமூக நலத்துறை, மதிய உணவுத்திட்டம்

குழந்தைகள், பெண்கள் நலன், ஆதரவற்றோர் நலன், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாடு மற்றும் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், சமூக மாற்றம், ஊட்டச்சத்து மிக்க மதிய உணவுத்திட்டம்

7 பி.பழனியப்பன், உயர்கல்வித்துறை

தொழில்நுட்பக்கல்வி, மின்னணிக்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

8. செல்லூர் கே.ராஜு, கூட்டுறவுத்துறை

கூட்டுறவு, புள்ளியியல், முன்னாள் படைவீரர் நலன்

9. ஆர்.காமராஜ், உணவுத்துறை

உணவு, குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுபபாடு.

10. பி.தங்கமணி, தொழில்துறை

தொழில்நிறுவனங்கள், ஸ்டீல் கட்டுப்பாடு, சுரங்கம், கனிமவளம் சிறப்பு முன்னெடுப்புகள்.

11. வி.செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை

போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து, மோட்டார் வாகனச் சட்டம்

12. எம்.சி.சம்பத், விற்பனை வரி மற்றும் பதிவுத்துறை, பத்திரச் சட்டம்.

13. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை

வேளாண்மை, வேளாண் பொறியில், வேளாண் சேவை கூட்டுறவு, பட்டுப்பூச்சி வளர்ப்பு, கரும்பு வரி, கரும்பு மேம்பாடு, பலனற்ற நில மேம்பாடு

14. எஸ்.பி.வேலுமணி, நகராட்சி நிர்வாகம்

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம்., நீதிமன்றங்கள், சிறைகள், ஊராட்சி, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கடனில்லாத ஊரகம், நகர்ப்புற மற்றும் ஊரக நீர் வழங்கல், சட்டம், பணியாளர்கள் மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு, ஊழல் ஒழிப்பு
minister1
15. டி.கே.எம்.சின்னைய்யா, கால்நடைத்துறை

16. எஸ்.கோகுல இந்திரா, கைத்தறி மற்றும் நெசவு

17. எஸ்.சுந்தரராஜ், விளையாட்டு, இளைஞர் நலன்

18. பி.செந்தூர் பாண்டியன், இந்து அறநிலையத்துறை

19. எஸ்.பி.சண்முகநாதன், சுற்றுலா வளர்ச்சி

20. என்.சுப்ரமணியன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன்

21. கே.ஏ.ஜெயபால், மீன்வளத்துறை

22. முக்கூர் என்.சுப்ரமணியன், தகவல்தொழில்நுட்பம்

23. ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை

வருவாய், மாவட்ட வருவாய் உருவாக்கம், துணை ஆட்சியர்கள், எடை மற்றும் அளவு, கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன்வழங்கல், ஏலச்சீட்டுகள், கம்பெனி பதிவு

24. கே.டி.ராஜேந்திர பாலாசி, தகவல் மற்றும் விளம்பரம்

சினிமா தொழில்நுட்பம், சினிமா சட்டம், அரசு அச்சக பொருடகள் மற்றும் அச்சு. தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்

25. பி.வி.ரமணா, பால்வளத்துறை

26. கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை

அகழ்வாராய்ச்சி, தமிழ் ஆட்சி மொழி

27. எம்.எஸ்.எம்.ஆனந்தன், வனத்துறை

28. தோப்பு என்.டி.வெங்கடாசலம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு

29. டி.கே.பூனாச்சி, காதி, கிராமத்தொழில்கள்

30. எஸ்.அப்துல ரஹீம், பிற்படுதப்பட்டோர் நலன்

சிறுபான்மை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வெளிநாடுவாழ் இந்தியர்கள், அகதிகள், வக்ஃப்

31. டாக்டர் சி.விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை, குடும்பநலன், மருத்துவக்கல்வி