September 29, 2021

தமிழக வாக்குப் பதிவை பொதுமக்கள் இணையம் மூலம் பார்க்கலாம்!

சென்னை: வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்க்க முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளான ஏப்ரல் 24ம் தேதி காலை 7 மணியிலிருந்தே இணையம் மூலம் வாக்குப் பதிவை காணலாம். public.gelsws.in என்ற இணையதள முகவரியில் வாக்குச் சாவடி நடவடிக்கைகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
poll watch
தமிழகத்தில் 39 மக்களவை, ஆலந்தூர் பேரவை உள்ளிட்ட தொகுதிகளில் மொத்தம் 60,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 60,817 வாக்குச் சாவடிகளில் 17,684 சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள குறிப்பிட்ட சாவடிகளை இணையதளம் மூலம் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாளான ஏப்ரல் 24ம் தேதி காலை 7 மணியிலிருந்தே இணையம் மூலம் வாக்குப் பதிவை தேர்தல் நாளான ஏப்ரல் 24ம் தேதி காலை 7 மணியிலிருந்தே இணையம் மூலம் வாக்குப் பதிவை காணலாம். public.gelsws.in என்ற இணையதள முகவரியில் வாக்குச் சாவடி நடவடிக்கைகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் முதன்முறையாக மக்களவைத் தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படும் என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ம் தேதி காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.