October 16, 2021

தமிழக மீனவர்களுக்கு உதவி !: மத்திய அரசு உறுதி!

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிலாடுதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேரை போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற் படையினர் கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய 5 பேர் உள்பட இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி பத்மா சூரசேன உத்தர விட்டார்.இந்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவி களையும் மத்திய அரசு செய்யும் என மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
srilanka oct 30
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்து சென்றனர். அவர்களின் படைகையும் பறிமுதல் செய்தனர்.

சிறை பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் தங்க வைக்க்கப்பட்டு பின்னர் அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தி வந்ததாக ஊர்க்காவல்படையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தமிழகத்தில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மேலும் 3 இலங்கையர்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 8 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த கொழும்பு உயர்நீதிமன்றம் 5 ராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளன.மேலும் தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து போராட்டம் வலுக்கிறது. ராமேஸ்வரம்- ராமநாதபுரம் ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. தண்டவாளத்தில் பல இடங்களில் தீவைக்கப்பட்டன. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது