November 29, 2021

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்குதுங்கோ!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி, ஆளுநர் உரையுடன் துவங்கும் என சட்டசபை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் கூடுவது வழக்கம். ஒரு சட்டப்பேரவை கூட்டதொடருக்கும் மற்றொரு கூட்ட தொடருக்குமான கால இடைவெளி 6 மாதங்களை தாண்டி இருக்க கூடாது என்பது விதியாகும். இந்த நிலையில் கடந்த ஜூலை 20ம் தேதியுடன் பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்தது. எனவே, அடுத்த கூட்ட தொடர் வரும் ஜனவரி 19ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது. எனவே, உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு கூட்ட தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 6ம் தேதி முதல் கூட்ட தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. மேலும், இந்த நிதியாண்டில்தான் தமிழக அரசு தனது முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியும். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதால் செலவுகளுக்கான நிதியை மட்டுமே பெற முடியும்.

எனவே, இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை மிகவும் முக்கியத்து வம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.மேலும், வரும் பிப்ரவரியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, வாக்குகளை கவரும் வகையில், இந்த கூட்டத் தொடரில் புதிய திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.

இதனிடையே சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து வருகின்ற 6ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறை சம்மந்தமான பிரச்சனைகள் குறித்தும் , மானிய கோரிக்கைகள் குறித்தும் பல விவாதங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் நாடு ஆளுநர் இந்திய அரசமைப்பு, பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டசபையின் கூட்டத்தை, 2020 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 6-ம் தேதி, திங்கள்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டசபை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய அரசமைப்பு, பிரிவு 176(1)-ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் சென்னை, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டசபை மண்டபத்தில் அன்றைய தினமே உரை நிகழ்த்த உள்ளார் என அறிவித்துள்ளார்.

2