April 13, 2021

தமிழகத் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையர்கள் சென்னை வருகை!

தமிழக சட்டசபை தோ்தலுக்கான ஆயத்தப்பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் தொடங்கி யுள்ளது.அதன் முக்கிய கட்டமாக இந்திய தோ்தல் ஆணையா்கள் குழுவினா் நாளை 21, மற்றும் நாளை மறுநாள் 22  (திங்கள்,செவ்வாய் கிழமைகளில்) சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்,மாவட்ட ஆட்சியா்கள்,போலீஸ் உயா் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகின்றனா்.

அதற்காக இந்திய தலைமை தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா் உமேஷ் சின்ஹா தலைமையில் தோ்தல் அதிகாரிகள் குழுவினா் சென்னை வரத் தொடங்கிட்ட்ானஙு்ிக் டம்பெற்றுள்ள பீஹாா் மாநில தலைமை தோ்தல் அதிகாரி சீனிவாசா பெங்களூரிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வந்தாா்.சென்னை விமானநிலையத்தில் தமிழக தோ்தல் பிரிவு அதிகாரிகள் அவரை வரவேற்று சென்னை கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு அழைச்சு சென்றனா்.

2021ம் ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங் களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. இதற்காக 2021-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. 18 வயது நிரம்பியவர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை தயார்படுத்துவது, சமூக இடைவெளிக்காக வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைத்து, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார்.

சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல் கட்டமாக மத்திய தேர்தல் கமிஷன் தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. முக்கியமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத நிலையில்தான் தேர்தலை சுமுகமாக நடத்த முடியும்.எனவே சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பொதுப் பிரச்னைகள், தேர்தல் தயார் நிலை, அரசியல் கட்சிகளின் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள், கருத்துகள் ஆகியவற்றை அறிய தமிழகத்துக்கு உயர் மட்ட குழுவை மத்திய தேர்தல் கமிஷன் அனுப்புகிறது மத்திய தேர்தல் கமிஷனின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர் மட்டக் குழுவின் ஒரு பிரிவினர் தமிழகம் வந்து சேர்ந்தனர்,

தமிழகத்தின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் எஸ்.பி.க்கள் ஆகியோருடன் உயர்மட்டக் குழு ஆலோசனை மேற்கொள்கிறது, நாளை டிசம்பர் 21ம் தேதி காலையில், 11.30 மணியளவில் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது, உயர்மட்டக் குழுவினர் அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித்தனியாக சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 22-ந் தேதியில் தமிழகத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.