October 20, 2021

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் மகளிர் விடுதி

“கல்வி பயின்ற பெண்கள் தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற பணிகளை தேடி, தாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து, மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்று பணி புரிவது அதிகரித்து வருகிறது. வெளியூரில் பணிகளுக்குச் செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் தேவைப்படுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதிகளை செய்து தரும் வகையில் சமூகநலத் துறையின் மூலம், சென்னையில் 2, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களிலும் தலா ஒரு விடுதி என 8 பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.பணி புரியும் மகளிருக்கான அரசு விடுதிகளை மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.” என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 - jayalalitha
இது குறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், ”ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அச்சமூகத்தில் பெண்கள் அடைந்திருக்கின்ற வளர்ச்சியை வைத்தே அளவிடமுடியும். பெண்கள் வளர்ச்சி அடையும் போது சமூகம் வளர்வது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினரும் வாழ்க்கையில் ஒரு சிறந்த துவக்கத்தை பெறுகின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெண்களுக்கு விடுதி : பெண்களுக்கு அரசு பெண் கல்விக்கு அளித்து வரும் ஊக்கத்தின் காரணமாக பெண்களில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. கல்வி பயின்ற பெண்கள் தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற பணிகளை தேடி தாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்று பணி புரிவது அதிகரித்து வருகிறது. வெளியூரில் பணிகளுக்குச் செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் தேவைப்படுகின்றன.

பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதிகளை செய்து தரும் வகையில் சமூகநலத் துறையின் மூலம், சென்னையில் 2, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களிலும் தலா ஒரு விடுதி என 8 பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.இது போன்ற அரசு விடுதிகளை மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தலா 1 பணிபுரியும் மகளிர் விடுதியும், சென்னையில் 6 பணிபுரியும் மகளிர் விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 பணிபுரியும் மகளிர் விடுதிகளும் என பணிபுரியும் பெண்களுக்கான 19 அரசு விடுதிகள் சுமார் 1,000 பணிபுரியும் பெண்கள் பயன்பெறும் வகையில் துவங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுதிகளில் பணியாற்ற ஒவ்வொரு விடுதிக்கும் கண்காணிப்பாளர் 1, சமையலர் 2, உதவி சமையலர் (தொகுப்பு ஊதியம்) 1, உதவி சமையலர் (தினக்கூலி) 1, அலுவலக உதவியாளர் 1, இரவு காவலர் 1, துப்புரவாளர் (தினக்கூலி) 1 என 8 பணியிடங்களை தோற்றுவிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது