October 17, 2021

தமிழகத்தில் +2 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதே சமயம் மதிப்பெண் வழங்கும் முறையை வகுக்க அமைக்கப்படும் குழுவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்பர். மதிப்பெண் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை உச்சகட்டதால், சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு மோடி அரசு பொதுத்தேர்வுகள் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை அடுத்து பல்வேறு மாநிலங்களும் மாநில அளவிலான பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து வருகிறது.

ஆனால் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை பொறுத்த வரையில், அவை மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று பயில்வது தொடர்பான விஷயங்கள் என்பதால் தமிழக அரசு இந்த விஷயத்தில் ஆராய்ந்து முடிவெடுப்பதாக தெரிவித்து இருந்தது. இதை அடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக முதலில் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக்கள் கேட்டதை தொடர்ந்து, சட்டமன்ற குழு உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள், மனநல ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று முதல்வரிடம் தெரிவித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.

அப்படி கூடிய சட்டமன்ற குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலம் என்பதால்,எதிர்கால பிரச்னையை கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தன. பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று மாலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான கருத்துக்களின் அறிக்கையை சமர்ப்பித்து இருந்தார்.

அது குறித்து கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து Aanthai Reporter CM Press Release (Plus 2 Exam)-Date 05.06.2021. மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் உயர் கல்வித்துறை செயலாளர், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி இருகிறது

அரசு சார்பில் வெளியான அறிக்கை இதோ