September 29, 2021

தமிழகத்தில் தற்போது மின்பற்றாகுறை இல்லை ! முதல்வர் தகவல்

தற்போது சென்னையில் தினசரி, சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இதை, நான்கு மணி நேரமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை என்ற நிலைமை தற்போது இல்லை என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
power-cut-in-tamilnadu-slogam
திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், ”கடந்த தி.மு.க. ஆட்சியை விட அ.தி.மு.க. ஆட்சியில் 4,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை என்ற நிலைமை தற்போது இல்லை. மின்உற்பத்தி நிலையங்களில் ஏற்படுகின்ற பழுது காரணமாகத்தான் தற்போது சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது.கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்சார உற்பத்திக்காக புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றாததால் தற்போது மின் பற்றாக்குறை நிலவியது. தற்போது செயற்கையான மின்பற்றாக்குறையை ஏற்படுத்தி அரசுக்கு அதிருப்தி ஏற்படுத்த சதி செய்கின்றனர்” என்றார்.

இதனிடையேதமிழகத்தில், கடந்த, 2007 – 08, 2008 – 09ல், பல பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்கின. இதனால் 1,000 மெகாவாட் கூடுதல் மின்சார தேவை ஏற்பட்டது. இதனால் இன்று வரை மின் பற்றாக்குறை நிலவுகிறது என்பதும் இது தற்போது அதிகரித்தும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.