April 13, 2021

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: மே 2ஆம் தேதி எண்ணிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்ட்சிகளின் கோரிக்கையையும் ஏஏற்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. குறிப்பாக, தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் வருகிற மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத்தில், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12-ம் தேதி துவங்குகிறது. மனுத் தாக்கலுக்கான கடைசி தேதி மார்ச் 19-ம் தேதியாகும். வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 20-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற மார்ச் 22-ம் தேதி கடைசியாகும். தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 2-ம் தேதி எண்ணப்படுகின்றன என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். மேலும் இந்த சட்டசபை தேர்தலோடு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

தமிழகத்தை போலவே புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும். அசாம் மாநிலத்தில் 3 கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

கேரளம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அம்மாநிலத்தில் மார்ச் 12-ம் தேதி மனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. மனுத்தாக்கலுக்கான கடைசி தேதி மார்ச் 19-ம் தேதியாகும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ம் தேதியாகும். மனுக்களை திரும்ப பெற மார்ச் 22-ம் தேதி கடைசியாகும். அம்மாநிலத்தில் பதிவான வாக்குகள் மே மாதம் 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.

3 கட்டமாக நடக்கும் அசாம் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் மாதம் 27-ம் தேதி நடக்கிறது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதியும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதியும் நடக்கிறது. 8 கட்டமாக நடைபெறும் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதியும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதியும், 4-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 10-ம் தேதியும், 5-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 17-ம் தேதியும், 6-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதியும், 8-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. மே மாதம் 24-ம் தேதி தற்போதுள்ள ஆட்சிக்காலம் முடிவடைகிறது. தமிழகத்தில் 88,936 வாக்குப்பதிவு மையங்கள். கடந்த தேர்தலை விட 34.73 சதவீதம் அதிகம். வாக்குப்பதிவு மையங்கள் அனைத்தும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவு.

தமிழக தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம். வேட்புமனு தாக்கலுக்கு 2 பேர் மட்டுமே அனுமதி. இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. வாக்கு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கும்.வேட்பாளர் 30.8 லட்சம் ரூபாய் செலவு செய்ய அனுமதி. புதுச்சேரியில் 22 லட்சம் ரூபாய் செலவு செய்ய அனுமதி

தமிழக சட்டமன்ற தேர்தல்: ஒரே கட்டம்

* தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி

* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி

* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி

* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல்:

* தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி

* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி

* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி

* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி