October 19, 2021

தனியார் பால் விலை இன்று மீண்டும் லிட்டருக்கு ரூ.4 அதிகரிப்பு!தயிர் விலை லிட்டருக்கு ரூ.12 !

தமிழகத்தில் வசிக்கும் 7லு கோடி மக்கள் பயன்பாட்டிற்கு தினமும் 1லு கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஆனால், தமிழக அரசு நிறுவனமான ஆவின் மூலம் 21 லட்சம் லிட்டர் பாலையே சப்ளை செய்ய முடிகிறது. மீதி தேவையான ஒரு கோடியே 29 லட்சம் லிட்டர் பாலை தனியார் நிறுவனங்களே வழங்கி வருகின்றன.தமிழகத்தில், இம்மாதம் 1-ந் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதை காரணம் காட்டி இந்த விலையேற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே, ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பால் சப்ளை செய்யும் 4 தனியார் நிறுவனங்கள் கடந்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது.
milk price
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியா, இம்மாதம் 6-ந் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியது. இந்த பால் விலை உயர்வு அமலுக்கு வந்து 4 நாட்கள் ஆன நிலையில், ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் திருமலா, டோட்லா, ஹெரிட்டேஜ், ஜெர்சி ஆகிய பால் நிறுவனங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் பால் விலையை மீண்டும் உயர்த்துகின்றன. அதாவது, லிட்டருக்கு ரூ.4 விலை அதிகரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வரலாறு காணாத வகையில் தயிர் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கிலோ பாக்கெட் தயிருக்கு ரூ.12-ம், கப் தயிருக்கு ரூ.20-ம் விலை கூடியுள்ளது.