October 24, 2021

தண்ணிரில் இருந்து எரிவாயு கண்டுப் பிடிச்சாச்சு!

விலை வாசியை பார்த்தா இனிமே தண்ணீல தான் வண்டி ஓட வைக்கனும்னு சொன்னவங்க வார்த்தை பலிச்சு போச்சி – உலகின் இன்றைய மிகப்பெரிய பிரச்சினை திரவக தங்கம் எனப்படும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இதன் மூலம் பல நாடுகளின் அந்நிய செலவானி. சூடு வைத்த ஆட்டோ மீட்டர் போல கரைந்து கொண்டே போவது ஒரு புறம் –
ravi 5
தினம் தினம் லட்சக்கணக்கில் வாகனங்களின் புது பதிவுகள் மற்றூம் மாசு நிறைந்த சூழ் நிலை என்று பல பிரச்சினைகளை சந்திப்பது ஒரு புறம் இருந்தாலும் இது வரை மின்சார கார்களின் கண்டுபிடிப்பு மிகவும் குறைந்த நிலையே இருக்கும் காரணம் அதனை தயாரிக்கும் விலை மற்றும் நடை முறை சிக்கல்கள்.

ஆடி உலகில் சொகுசு கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் ஒரு முன்னோடி ஆடி நிறுவனம் தன் ஆராய்ச்சிக்கூடத்தில் ‘e-diesel’ என்னும் நீல வகை டீஸலை கண்டுப்பிடித்து இருக்கின்றனர். இது என்ன புது வகை டீஸலா இதை தயாரிக்கவும் கச்சா எண்ணெய் தேவையா என கேட்டால் அது தான் இல்லை.

வெறும் தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு என்னும் கரிய அமிலம் மூலம் இந்த புது வகை எரி பொருளை கண்டறிந்து அதை செயல்முறையில் வெற்றியாக மாற்றி காட்டி இருக்கின்றனர். இந்த நீல டீஸல் என்னும் ‘e-diesel’ எப்படி தயாரிக்க படுகிறது என்பதை விவரிக்கிறேன்.

வெறும் தண்ணீரை இயற்கை வாயு மூலம் 800 டிகிரி வரை கொதிக்க வைக்கும் போது அந்த நீரானது ஹைட்ரஜன் பிரிந்து அங்கு செலுத்தப்படும் கரிய அமில வாயு மூலம் நீல நிற அதிக சக்தி வாய்ந்த டீஸல் கிடைக்கிறது அதாவாது நீரின் ஆவி தான் இந்த டீஸலாக மாறுகிறது என்ன 800 டிகிரி வரை கொதிக்க வைக்க வேண்டும் என்பதே ஒரே கன்டிஷன். இது செயல் முறைக்கு வந்தால் இந்த அதி சக்தி வாய்ந்த டீஸல் லிட்டருக்கு 20 ரூபாய் தான் செலவே.

இதன் செயல் விளக்கமுறை
ravi 5a
Water and Carbon Di-Oxide is enough to produce Blue Diesel and Proved by Audi