September 27, 2021

தட்கல் டிக்கெட் புக்கிங் டைமிங் மாத்த போறாஹ.. அதுவே கேன்சல் ஆனாலும் பாதி துட்டு தாராஹ!

இதுநாள் வரை தட்கல் முறையில் முன்பதிவு செய்த பயணிகள் திடீரென பயணம் செய்ய முடியாமல் போனால் அந்த டிக்கெட்டை ரத்து செய்யவோ கட்டணத்தை திரும்ப பெறவோ வழியே இல்லாத நிலை உள்ளது. இனி அதை ரத்து செய்ய நேரிட்டால் கட்டணத்தில் பாதியை திரும்பபெறும் விதமாக தட்கல் முன்பதிவு முறையை மாற்றியமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
train jun 10
அது மட்டுமின்றி தட்கல் டிக்கெட்டுக்கான முன்பதிவு நேரம் இரு பிரிவாக மாற்றியமைக்கப் பட்டுள்ளது. ஏ.சி. வகுப்பில் காலை பயணிப்போர் 10 மணி முதல் 11 மணி வரையிலும், மற்ற வகுப்பு பயணிகள் 11 மணியிலிருந்து 12 மணிவரையிலும் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கோடைக்கால சிறப்பு ரயில் போன்று கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முக்கிய வழிதடங்களில் தட்கல் பெஷல் என புதிய சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் பிரிமீயர் டிக்கெட் போன்று அல்லாமல், கவுண்டர்களிலும் இந்த தட்கல் சிறப்பு ரயில்வே டிக்கெட்டை பெறமுடியும். 10 நாட்களுக்கு முன்னதாக இந்த ரயில்களுக்கு பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட்டுகள் தற்போது பயணம் செய்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக வழங்கப்படுகிறது.