September 24, 2021

‘தடை’யை மீறி தங்க காசு விற்­ப­னையில் அஞ்சல் துறை :- வெடிக்கும் சர்ச்சை

கடந்த சில மாதங்களாக பொதுத் துறை வங்­கிகள் தங்க காசுகள் மற்றும் பதக்கங்களை விற்­பனை செய்ய மத்­திய நிதி­ ­அமைச்­சகம் தடை விதித்­துள்­ளது.இதற்கிடையில் மத்­திய அரசின் அங்­க­மான தேசிய அஞ்சல் துறை தங்க காசு­களை விற்­பனை செய்­ய இருப்­பது பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது.இதன் மூலம் இந்த அரசின் இரு அமைச்­ச­கங்­க­ளுக்கு இடை­யில் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது அம்பலத்­திற்கு வந்­துள்­ளது.
nov 19 vanikamndia-post-gold-coin.
கடந்த 12–13ம் நிதி­யாண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை 8,800 கோடி டால­ராக அதி­க­ரித்­தது. இதற்கு 5,800 கோடி டாலர் மதிப்­பி­லான 850 டன் தங்கம் இறக்­கு­மதி
செய்­யப்­பட்­டதும் ஒரு காரணம் என நிதி­ய­மைச்­சகம் கரு­தி­யது.எனவே தங்கம்
இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை விதித்­தது.
அதன் ஒரு அங்கமாக தங்கம் மீதான இறக்­கு­மதி வரி 10 சத­வீ­த­மா­கவும் ஆப­ர­ணங்­க­ளுக்­கான சுங்க வரி 15 சத­வீ­த­மா­கவும் அதி­க­ரிக்­கப்­ பட்­டது.மேலும் இறக்­கு­ம­தி­யாகும்
தங்­கத்தில் 20 சத­வீதம் மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்­க­ளாக ஏற்­று­மதி செய்­யப்­பட வேண்டும் எனவும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இது மட்டுமின்றி பொதுத்­துறை வங்­கிகள் தங்க காசுகள், பதக்­கங்கள் ஆகி­ய­வற்றை
விற்­பனை செய்­வ­தற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்­தது.இது போன்ற நட­வ­டிக்­கை­களால் தங்கம் இறக்­கு­மதி வெகு­வாக குறைந்­துள்­ளது.சென்ற மே மாதம் 162 டன் தங்கம்
மட்டுமே இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து நடப்பு நிதி­ஆண்டில் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை இலக்கை ( 7,000 கோடி டாலர்) விட 1,000 கோடி டாலர் குறைந்து 6,000 கோடி டால­ராக சரி­வ­டையும் என மத்­திய நிதி­ய­மைச்சர் ப.சிதம்­பரம் தெரிவித்தார்.
ஆனால் நிதி­ய­மைச்சர் கூறி­யதை விட நடப்பு கணக்கு பற்­றாக்­குறை மேலும் 400 கோடி டாலர் குறைந்து 5,600 கோடி டால­ராக வீழ்ச்சி காணும் என ரிசர்வ் வங்­கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அண்­மையில் கூறினர்.

இதற்கிடையில் இவர்­களின் நம்­பிக்­கையை தகர்க்கும் விதத்தில் தங்க காசுகள்
சப்­ளைக்­காக அஞ்சல் துறை கடந்த 6ம் தேதி வெளி­யிட்­டுள்ள ஒப்­பந்த புள்ளி
அமைந்­துள்­ளது. அதில் வரும் 27ம் தேதி வரை வர்த்­த­கர்கள் ஒப்­பந்த புள்­ளி கோரி
விண்­ணப்­பிக்­கலாம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.தற்போது இணை­ய­தள பயன்­பாடு
அதி­க­ரித்த பின்னர் அஞ்சல் அட்டை, தந்தி, மணி­யார்டர் உள்­ளிட்­ட­வற்றின் வாயி­லான வரு­வாயை தேசிய அஞ்சல் துறை இழந்து விட்­டது.வருவாய் பெருக்கம் தற்­போது
கட்­டண சேவை­க­ளையே இலக்­காக கொண்டு செயல்­படும் தேசிய அஞ்சல் துறை அதன் வரு­வாயை பெருக்கும் நோக்­குடன் தங்க காசுகள் விற்­ப­னையில் இறங்க உள்­ளது.

இதற்கு, நிதி­ய­மைச்­சகம் இட­ம­ளிக்­குமா இல்­லையா என்­பது விரைவில் தெரிந்து விடும்.இதே சமயம் அஞ்சல் துறை வங்கித் துறையில் கால் பதிக்­கவும் திட்­ட­மிட்­டுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்நிலையில் ‘தங்க காசு­களை விற்க பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு தடை
விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அஞ்சல் துறைக்கு மட்டும் அனு­மதி வழங்­கி­யது எப்­படி?’’, என்று இந்­திய கம்­யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்­பி­யுள்ளார். இது­கு­றித்து விளக்கம் அளிக்­கு­மாறு அவர் பிர­த­ம­ருக்கு கடிதம் எழு­தி­யுள்ளார் என்றும் தெரிகிறது.

India’s Dept. of Posts floats gold coin tender, others cry foul
*************************************************************************************
A battle appears to be brewing between the Indian government and the Department of Posts, which has floated a tender for the sale of gold coins through some 1,000 post offices.With the Indian government taking strong measures to discourage gold consumption, the tender by the Department of Posts has also brought on howls of protest by political parties.