September 18, 2021

தடைசெய்யப்பட்டத் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியதாக பழ.நெடுமாறன் மீதுவழக்கு!

தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா கோர்ட் அனுமதியுடன் நடத்தப்பட்டது. இந்த விழா தொடர்பாக தஞ்சையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டன. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய படங்களும் இடம் பெற்றிருந்தன.இந்நிலையில் தடைசெய்யப்பட்டத் தலைவர்களின் புகைப்படங்களை விளம்பரப் பலகைகளில் இடம் பெற வைத்தாக கூறி, பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் உள்ளிட்ட 6 பேர் மீது தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம்.என்று நெடுமாறன் தெரிவித்துள்ளார்
nov 10 -nedumaran-unveils-mullivaikkal-
தஞ்சை விளார் சாலையில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் ஈழப் போர் குறித்த நினைவு முற்றத்தை கடந்த 6 ஆம் தேதி பழ.நெடுமாறன் தலைமையில் திறக்கப்பட்டது.
நினைவு முற்றம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு 3 நாட்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தஞ்சை முழுவதும் சாலைகளில் அதற்கான விளம்பர பலகைகள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், தடைசெய்யப்பட்டத் தலைவர்களின் புகைப்படங்கள் அந்த விளம்பரப் பலகைகளில் இடம் பெற்றுள்ளதாக கூறி, பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் உள்ளிட்ட 6 பேர் மீது தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இன்று செய்தியாளார்களை சந்தித்தபோது, ”முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்ச்சி மதுரை உயர் நீதிமன்ற ஆணைக்கு இணங்க கடந்த 2 நாட்களாக மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த நிழக்ழ்ச்சியில் பல்வேறு பகுதியில் இருந்து உலக தமிழர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு ஒலிபெருக்கி பயன்படுத்தியதாக என் மீதும் மற்றும் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம். ஒலிபெருக்கி உரிமையாளரை நேற்று இரவு போலீசார் கைது செய்து ஒலி பெருக்கி சாதனங்களையும் கைப்பற்றி சென்றுள்ளனர்.

இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று எந்த முன் அறிவிப்பும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. எங்களுக்கு குற்றப்பத்திரிகையும் கொடுக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதற்கு எந்தவித இடையூறும் செய்ய வேண்டாம் என்று காவல் துறையினரையும், அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன். நிகழ்ச்சி முடியும் வரை அனைத்து மக்களையும், இயக்க தோழர்களையும் நாங்கள் உறுதியாக கட்டுப்படுத்துவோம். வேறு ஏதேனும் அசம்பாவித நிகழ்வுகள் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று கூறினார்.