September 29, 2021

‘தங்க மீன்கள்’ 3 தேசிய விருதுகளை பெற்று சாதனை!

திரைப்படத் துறைக்கான 61-வது தேசிய விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.அதில்,மாநில மொழி பிரிவில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக, ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படத்தில் நடித்த சாதானாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது.மேலும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார்.இந்த படம் குறித்து தமிழ் ஹிந்து நாளிதழ் ‘நொந்த மீன்கள்’ என்ற தலைப்பில் விம்ர்சனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
thanga_meengal_movie_stills
ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் இந்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது. அதன்படி 61 வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில்கற்றது தமிழ் படத்திற்கு பிறகு ராமே எழுதி இயக்கிய படம் ’தங்கமீன்கள்’படத்திற்கு தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய மொழி திரைப்படங்கள் பிரிவில் தமிழில் இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது நா.முத்துகுமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதில் நடித்த சாதானாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது. ராம் இயக்கத்தில் ராம், சாதனா, ஜெல்லி கிஷோர் ஆகிய நடத்த படம் இப்படம் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி ரிலீஸ் ஆனது.இந்த படம் குறித்து தமிழ் ஹிந்து நாளிதழ் ‘நொந்த மீன்கள்’ என்ற தலைப்பில் விமர்சனம் வெளியிட்டிருந்ததும் அதில் குழந்தை மீதான அன்பைக் காரணம் காட்டிப் பொறுப்பற்றுத் திரியும் தந்தை தன் மீதான தவறுகளைக் கடைசிவரை ஒப்புக்கொள்ளாமல், தன் நிலைக்குச் சமூகம்தான் காரணம் என்று தப்பித்துக்கொள்ளும் விதமாகப் படத்தை எடுத்துள்ள ராம், படத்துக்கு உள்ளேயும் வெளியேயும் செய்யும் பாவனைகளைத் தாங்க முடியவில்லை என்றிருந்ததும்.குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில், சிறந்த படமாக பாலு மகேந்திராவின் ‘தலைமுறைகள்’ தேர்வு செய்யப்பட்டது. தமிழின் ‘வல்லினம்’ படத்துக்கு சிறந்த எடிட்டிங் பிரிவில் தேசிய விருது கிடைத்துள்ளது.

சினிமா அல்லாத பிரிவில், தமிழில் வெளியான ‘தர்மம்’ என்ற குறும்படம் சிறப்பு விருதை வென்றுள்ளது. இதை இயக்கியவர் மடோன் எம்.அஸ்வின். ஒரு குழந்தையின் பார்வையில் நடுத்தர வர்க்க வாழ்க்கையைப் பதிவு செய்த குறும்படம் இது.பல்வேறு பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில் இம்முறை தேசிய விருதுகளை வென்றிருப்பது பெங்காலி மற்றும் மராத்தி மொழி படங்களே என்பது கவனிக்கத்தக்கது.

விருதுப் பட்டியல்:

* சிறந்த திரைப்படம்: ஷிப் ஆஃப் தீசிஸ் (Ship of Theseus) (ஆங்கிலம் – இந்தி)

* சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஃபாண்ட்ரி (Fandry) (மராத்தி)

* சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – பாக் மில்கா பாக்

* தேசிய ஒறுமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது – தலைமுறைகள்

* சமூகப் பிரச்சினைகளைக் காட்டிய சிறந்த படம்: தூஹியா தர்மா கோச்சா (Tuhya Dharma Koncha) (மராத்தி)

* சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் : பெரறியாதவர் (Perariyathavar) (மலையாளம்)

* சிறந்த குழந்தைகள் படம் – காபல் (Kaphal) (இந்தி)

* சிறந்த இயக்குநர் – ஹன்ஷல் மேத்தா (படம்: ஷாஹித்) (இந்தி)

* சிறந்த நடிகர் – ராஜ்குமார் (ஷாஹித் – இந்தி) மற்றும் சூரஜ் வெஞ்சராமூடு (பேரறியாதவர் – மலையாளம்)

* சிறந்த நடிகை – கீதாஞ்சலி தாபா (படம்: லயர்ஸ் டைஸ் – Liar’s Dice – இந்தி)

* சிறந்த உறுதுணை நடிகர்: செளரப் சுக்லா (ஜாலி எல்.எல்.பி – இந்தி)

* சிறந்த உறுதுணை நடிகை: அமிருதா சுபாஷ் (அஸ்து – மராத்தி) மற்றும் ஆயிடா எல்-காஷெஃப் (ஷிப் ஆஃப் தீசஸ்- ஆங்கிலம், இந்தி)

* சிறந்த குழந்தை நட்சத்திரம்: சோம்நாத் அவ்காடே (ஃபாண்ட்ரி – மராத்தி) மற்றும் சாதனா (தங்கமீன்கள் – தமிழ்)

* சிறந்த பின்னணி பாடகர்: ரூபன்கர் (படம் – ஜாதிஸ்வர் – பெங்காலி)

* சிறந்த பின்னணி பாடகி: பெலா ஷிண்டே (படம்: துஹ்யா தர்மா கோச்சா – மராத்தி)சிறந்த ஒளிப்பதிவு – ராஜீவ் ரவி (Liar’s Dice – இந்தி)

* சிறந்த திரைக்கதை (அசல்) – ஷேசாத்திரி (டிசம்பர் 1 – கன்னடம்)

* சிறந்த திரைக்கதை (தழுவல்) – பஞ்சாக்‌ஷரி (பராக்ருதி – கன்னடம்)

* சிறந்த திரைக்கதை (வசனம்) – சுமித்ரா பாவே (அஸ்து – மராத்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Location Sound Recordist): நிகர் ரஞ்சன் சமல் (மெட்ராஸ் கபே – இந்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Sound Design) – பிஸ்வாதீப் சட்டர்ஜி (மெட்ராஸ் கபே – இந்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Re-recordist of the final mixed track) – யுவராஜ் – ஸ்வப்னம் (மலையாளம்)

* சிறந்த எடிட்டிங் – சாபு ஜோசப் (வல்லினம்)

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – ஆஷிம் அலுவாலியா, தப்ஷீர் ஸுத்சி, பரிசித் பரால்கர் (மிஸ் லவ்லி – இந்தி)

* சிறந்த ஆடை வடிவமைப்பு – சபர்னி தாஸ் (ஜாதிஷ்வர் (Jaatishwar) – பெங்காலி)

* சிறந்த ஒப்பனை கலைஞர் – விக்ரம் கெய்க்வாட் (ஜாதீஷ்வர் – பெங்காலி)

* சிறந்த இசை (பாடல்கள்) – கபிர் சுமன் (ஜாதீஷ்வர் – பெங்காலி)

* சிறந்த இசை (பின்னணி இசை) – சாந்தனு மோஹித்ரா (நா பங்காரு தாலி – தெலுங்கு)

* சிறந்த பாடலாசியர்: நா.முத்துகுமார் (ஆனந்த யாழை – தங்கமீன்கள்)

* சிறப்பு நடுவர் விருது: எல்லோ (மராத்தி) மற்றும் மிஸ் லவ்லி (இந்தி)

* சிறந்த கிராபிக்ஸ்: இன்டர்மெஸ்ஸோ ஸ்டூடியோ, ஏலியன் சென்ஸ் ஃபிலிம் லிட் (ஜல் – இந்தி)

* சிறந்த நடனம்: கணேஷ் ஆச்சார்யா (பாக் மில்கா பாக் – இந்தி)

* சிறந்த அசாமி மொழி படம்: அஜேயோ (Ajeyo)

* சிறந்த வங்கமொழி திரைப்படம் – பாகிதா பியாக்திகடோ (Bakita Byaktigato)

* சிறந்த இந்தி திரைப்படம்: ஜாலி எல்.எல்.பி

* சிறந்த கன்னடத் திரைப்படம்: டிசம்பர் 1

* சிறந்த கொங்கானி திரைப்படம்: பாகா பீச்

* சிறந்த மலையாள திரைப்படம்: நார்த் 24 காதம்

* சிறந்த மராத்தி திரைப்படம் – அஞ்சா திவாஜ் மாஜ்ஹா (Aajcha Diwas Majha)

* சிறந்த தமிழ் திரைப்படம் – தங்க மீன்கள்

* சிறந்த தெலுங்கு திரைப்படம் – நா பங்காரு தாலி (Na Bangaaru Talli)

* சிறந்த ஆங்கில திரைப்படம் – தி காஃபின் மேக்கர் (The coffin Maker)