September 29, 2021

தங்க காசு விற்பனை திட்டத்தை கை விட்டது அஞ்சல்துறை!

பொதுத் துறை வங்­கிகள் தங்க காசுகள் மற்றும் பதக்கங்களை விற்­பனை செய்ய மத்­திய நிதி­ ­அமைச்­சகம் தடை விதித்­த நிலையில் மத்­திய அரசின் அங்­க­மான தேசிய அஞ்சல் துறை தங்க காசு­களை விற்­பனை செய்­ய இருப்­பது பெரும் சர்ச்­சையை கிளப்­பி­து அல்லவா?(இது குறித்து முன்னர் நம் இதழில் வெளியான செய்தி:(http://www.aanthaireporter.com/?p=4544)தற்போது நிதியமைச்சகத்தின் எதிர்ப்பை தொடர்ந்து தங்க காசு விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு. தங்க காசு விற்பனைக்காக வெளியிடப்பட்ட ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை வலை தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
nov 19 vanikamndia-post-gold-coin.
நாட்டின் நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் தங்க காசுகள், பதக்கங்கள் இறக்குமதிக்கும், அவற்றை பொதுத் துறை வங்கிகள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.இத்தகைய நடவடிக்கைகளால் கடந்த சில மாதங்களாக தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.இந்நிலையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறை தங்க காசு விற்பனையில் ஈடுபட முடிவு செய்து.கடந்த 6ம் தேதி தங்க காசு வினியோகத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
மத்திய அமைச்சகங்களின் இந்த முரண்பாடான செயல்பாடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் எஸ்.சுதாகர் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியதையடுத்து இரு அமைச்சகங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை; அஞ்சல் துறை ஒப்பந்த புள்ளியை திரும்பப் பெறும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் கூறினார்.அதன்படி அஞ்சல் துறை ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து உள்ளதாக அறிவித்துள்ளது.

Postal Department Drops Gold Coin Tender.
**************************************************************
The department of posts under the ministry of communication and information technology has cancelled its tender for the supply of gold coins to be sold through various post offices. The tender was floated on November 6 despite a government ban on gold coin imports. It was to close on November 27. Without assigning any reason, the postal department – in a communication posted on its website on Tuesday – said that the tender was being cancelled.