September 29, 2021

தங்கம் இறக்குமதிக்கு மறுபடியும் கட்டுப்பாடு?

மத்திய அரசு, தன் கணக்கு பற்றாக்குறையை (சிடிஏ) குறைக்க இறக்குமதி தங்கத்தின் மீது கட்டுப்பாடு விதித்தது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 80:20 என்ற விகிதத்தில் 20 சதவீத தங்கத்தை ஆபரண தங்கமாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று நகை உற்பத்தியாளர்கள் ”முறைப்படி”கோரிக்கை விடுத்துவந்தனர். கட்டுப்பாட்டை நீக்கினால் தான் தங்கம் கடத்தல் தடுக்கப்படும் என்றும் இறக்குமதியின் அளவும் குறையும் வர்த்தகர்கள் எனவும்கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், 80:20 என்ற கட்டுபாட்டை மத்திய அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வது 6 மடங்கு அதிகரித்துள்ளது. இது கவலையளிக்க கூடியதாக இருக்கிறது என்றும், இந்நிலை நீடித்தால் நாட்டின் நடப்பு கணக்குபற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் சுட்டிகாட்டியுள்ளது.
gold_2
இந்நிலையில், மும்பை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராஜிவ்கெர் பங்கேற்று பேசியபோது, இறக்குமதி தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஏற்படும் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதன் செயல்பாட்டை அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். கச்சா எண்ணெய் விலை சற்று சரிந்துள்ளதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஓரளவு சாதமாக இருக்கிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தியதற்கு கச்சா எண்ணெய் விலை சரிவும் ஒரு காரணமாகும்.மேலும் இறக்குமதி தங்கத்தின் மீதான கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் சாதகபாதகங்களை அரசு ஆய்வு செய்யும். தங்கம் இறக்குமதி அதிகரித்து வருவதையும் அரசு கண்காணித்து வருகிறது. அதே நேரத்தில் இறக்குமதி தங்கத்தின் மீதான விதிமுறைகளை சீரமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்