September 18, 2021

தகவல் தொடர்புக்கான செயற்கைக் கோள் விண்ணில் நிலை நிறுத்தி இஸ்ரோ சாதனை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல் தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காகவும், ‘எஸ்.பேண்ட்’ தொலைத்தொடர்புக்கு பயன்படும் வகையிலும் ‘ஜி சாட்-6’ என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.இந்த செயற்கை கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி டி-6’ ராக்கெட் இன்று மாலை 4.52 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத் தில் இருந்து விண்ணில் ராக்கெட் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் 49 மீட்டர் உயரமும் 416 டன் உயரமும் கொண்டது ஆகும்.
isro aug 27
இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்ட 17 நிமிடம் 4 விநாடிகளில் ராக்கெட்டில் இருந்து ‘ஜி சாட்6’ செயற்கைகோள் பிரிந்து சென்று வெற்றிகரமாக தற்காலிக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஜிஎஸ். எல்.வி டி -6 ராக்கெட் இந்தியாவின் 9-வது ‘ஜி.எஸ்.எல்.வி’. ராக்கெட் ஆகும். இது நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3-வது ‘கிரையோஜெனிக்’ என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இதேபோன்று ஜிசாட்-6 செயற்கை கோள், இந்த வரிசை யிலான 12-வது செயற்கை கோள் ஆகும். இஸ்ரோவின் 25 வது தொலைதொடர்பு செயற்கைகோள் இதுவாகும். இந்த செயற்கைகோளின் ஆயுள்காலம் 9 ஆண்டுகள் ஆகும். இது தகவல் தொடர்பில் சிறப்பான பங்கு பணி ஆற்றும்.

ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித் துள்ளனர். ஒட்டுமொத்த விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்று இஸ்ரோ தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளதாவது:- வெற்றிகரமாக ஜிசாட் -6 செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றொரு வியத்தகு சாதனையை புரிந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.