October 19, 2021

டோண்ட் ஒர்ரி! பீ ஹேப்பி!! – சரத்துக்கு விஷால் பதில்

”என்னை நடிகர் சங்கத்தை விட்டு நீக்கினால் கவலையில்லை. ஆனால் என்னைப் பற்றி பேசிய அவதூறு பேச்சுகளுக்கு விளக்கம் அளிக்கவேண்டும்” என்று ‘ஆம்பிளை” விஷால் நடிகர் சங்கத் தலைவர் சரத்துக்கு மெயில் அனுப்பியுள்ளார்.
vishal sarath
சமத்துவ மக்கள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சி போ அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும், நடிகர் சங்கத் தலைவருமான நடிகர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது,தொடர்ந்து ஏன் நடிகர் சங்கத்தை பற்றி விமர்சித்து பேசி வருகிறார்கள் என தெரியவில்லை. இதுவரை விஷாலுக்கு எந்த பதிலும் கூறவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் விஷாலுக்கு நான் முறையாக பதில் சொல்ல விரும்புகிறேன்.நடிகர் சங்கத்திற்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருந்தது. நடிகர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தை போட்டு பல நிகழ்ச்சிகள் நடத்தி அந்த கடன் அடைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நடிகர் சங்கத்துக்கு 3 அரை கோடி ரூபாய் வைப்பு நிதியும் வைக்கப்பட்டுள்ளது. சத்யம் சினிமாசுடன் ஒப்பந்தம் செய்து கட்டடம் கட்டி 29 ஆண்டுகளுக்கு லீசுக்கு விடப்பட்டுள்ளது.

தற்கான முடிவை செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவுகள் எடுக்கப்பட்டது. நாங்கள் என்ன வேலை செய்கிறோம் என தெரியாமல், இதற்கு முன்னால் சங்க செயல்பாடுகள் எப்படி இருந்தது, இப்போ எப்படி இயங்குகிறது என எதுவும் தெரியாமலேயே வெளியில் இருந்தபடி தேவையில்லாமல் தொடர்ந்து விஷால் ஏன் அவதூறு செய்திகளை பரப்புகிறார் என தெரியவில்லை. இது நல்லது இல்லை. இதுபோன்று தொடர்ந்து விஷால் அவதூறு செய்திகளை பரப்பினால், அவர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார். நான் விஷாலை கடுமையாக எச்சரிக்கிறேன்” என்று ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நடிகர் விஷால் சரத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய செய்தியில்,”நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவேன் என்ற செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தச் செய்தி எனது சினிமா வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.நடிகர் சங்கத்தின் மீது மதிப்பு வைத்திருப்பவன் நான். நடிகர் சங்க நிர்வாகிகளான ராதாரவி, கே.என்.காளை ஆகியோர் என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர். அதற்கு விளக்கம் கேட்பது தவறா? கேள்வி கேட்பது தவறா?. என்னை சங்கத்தை விட்டு நீக்கினால் கவலையில்லை. ஆனால் என்னைப் பற்றி பேசிய அவதூறு பேச்சுகளுக்கு விளக்கம் அளிக்கவேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.