September 17, 2021

டேட்டா களவாணிகளோடு ஃபேஸ்புக் மார்க் அண்ணாச்சியும் சேர்ந்துவிட்டார் போல..!

இணையத்தை பயன்படுத்தி வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் பேசிக்கொள்ளலாம் என்ற வசதி வந்துவிட்டதால் செல்போன் நெட்வொர்க் கொள்ளையர்கள் அடங்குவார்கள் என சந்தோசப்பட்டிருப்பீர்கள். ஆனால் முதலாளிகள் ஒன்றும் அத்தனை ஏமாளிகள் அல்ல.
edit sep 26
இனிமேல் அவர்களுக்கு பேசுவதில் வரும் வருமானத்தை விட நெட் பயன்பாட்டில் வரும் வருமானம் தான் பெருமளவில் இருக்கும்.

அதனால் நெட் பேக்கேஜில் கொள்ளையடிக்கும் தந்திரத்தில் செல்போன் நிறுவனங்கள் இறங்கியிருக்கின்றன.
98 ரூபாய்க்கு 2ஜியும், 127 3ஜியும் ஆரம்பத்தில் கொடுத்தார்கள். இப்போது அதன் விலையை பலமடங்கு ஏத்திவிட்டார்கள். ஒரு மாதம் விலையை ஏற்றாமல் வைத்தால் அடுத்தமாதம் டேட்டாக்களின் வேலிடிட்டி(நிலுவை) காலத்தை குறைத்துவிடுகிறார்கள்.

Airtel களவாணிகளைப்பற்றி கேட்கவே வேண்டாம். நெட் பேக்கேஜ் பிளானில் ரேட்டை மாதாமாதம் ஏத்தி கொள்ளையடிக்கிறார்கள்.

3ஜியை இப்போ 4ஜினு சொல்லி வித்துட்டு இருக்காங்க.

இதுபோன்ற டேட்டா களவாணிகளோடு இப்போ ஃபேஸ்புக் மார்க் அண்ணாச்சியும் சேர்ந்துவிட்டார் போல..
கடந்த இரு நாட்களாக ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் நம் விருப்பமில்லாமல் அதுவாகவே இயங்க ஆரம்பிக்கிறது. ஒரு வீடியோவை பார்க்கணுமா வேணாமானு நாமதான் முடிவு பண்ணனும். ஆனால் நீங்கள் மவுஸை கீழே இழுக்கும்போது இடையில் எந்த வீடியோக்கள் இருந்தாலும் அதுவாகவே ஓட ஆரம்பிக்கிறது.

இவங்களாகவே அந்த வீடியோக்களை ஓடவிட்டு நம் டேட்டாவை காலி செய்கிறார்கள்.

பேஸ்புக் அலுவலகத்துக்கு மோடியை மார்க் தம்பி கூப்பிட்டதற்கும் ஏதேனும் தொடர்புண்டா..

-கார்ட்டூனிஸ்ட் பாலா