September 23, 2021

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க போட்டி!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி தலைவர் விஜயகாந்த் வரும் 27-ந்தேதி டெல்லி செல்வதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறுகிறது. இதனால் டெல்லி அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தே.மு.தி.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
25 - vijaykanth
டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யவும், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தே.மு.தி.க. சார்பில் வரும் 27-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லி செல்கிறார்.

இதுகுறித்து டெல்லி தே.மு.தி.க. மாநில செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி “டெல்லி ஐந்தர்மந்தர் பகுதியில் வரும் 27-ந்தேதி (ஞாயிறு) நடைபெறும் தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

அந்த கூட்டத்தில் டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுவது பற்றிய அறிவிப்பை வெளியிடவும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். கூட்டத்தில் டெல்லியில் வசிக்கும் தமிழர்களின் ஜாதிச் சான்றிதழ் பிரச்சினை பற்றியும் வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசுவார். “என்று அவர் தெரிவித்தார்.