டில்லியில் ஆட்சியமைக்க தங்களிடம் போதிய பெரும்பான்மை இல்லை என பா.ஜ.க,உறுதிபட தெரிவித்து விட்டதையடுத்து ஆம் ஆத்மி கட்சிக்கு துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று வரும் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கவர்னரை கெஜ்ரிவால் சந்தித்து பேசுகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.அதே சமயம் , தங்களால் ஆட்சி அமைக்க இயலாது, எதிர்க்கட்சி வரிசையில்தான் அமருவோம் என்று அரவிந்த் கேஜ்ரிவாலும் கூறி வருவதால், டெல்லியில் குழப்ப நிலையே நீடித்து வருகிறது.
டெல்லி சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க வரும்படி கவர்னரால் அழைக்கப்பட்டிருந்த பாஜக அறிவித்துவிட்டது.நேற்று மாலை டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்த்தனை ஆட்சி அமைப்பது குறித்துப் பேச அழைத்திருந்தார். . அப்போது, டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் தங்களுக்கு உறுப்பினர் பலம் இல்லை என்பதால், தங்களால் ஆட்சியமைக்க முடியாது என்று அவர் நஜீப் ஜங்கிடம் தெரிவித்துவிட்டார். மேலும், தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்குத் தயாராக இருப்பதாகவும் ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களைப் பெற, குதிரை பேரத்தில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை என்ரும் தெரிவித்தார் அவர்.
இதை அடுத்து, மரபுப்படி, உறுப்பினர் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைப்பது தொடர்பான செயல் திட்டம் குறித்து விவாதிக்க வருமாறு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால், வரும் சனிக்கிழமை துணை நிலை ஆளுநரை சந்திக்க வருவதாக பதில் அளித்துள்ளார்.
இருப்பினும், தங்களால் ஆட்சி அமைக்க இயலாது, எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம் என்று ஏற்கெனவே அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதால், டெல்லியில் குழப்ப நிலையே நீடித்து வருகிறது.
Lt-Governor Jung invites Kejriwal for talks tomorrow
****************************************************************
Lieutenant-Governor Najeeb Jung on Thursday evening invited Aam Aadmi Party leader Arvind Kejriwal for discussions on Saturday for government formation.