October 25, 2021

டெபிட்,கிரெடிட் கார்டுகளில் இஎம்வி சிப்/பின் நம்பர் கட்டாயம்! – ரிசர்வ் பேங்க் ஆர்டர்

ஷாப்பிங் செய்வதற்கும், ஆன்லைனில் பொருட்களை வாங்கவும் கட்டணம் செலுத்தவும் பெரும்பாலான மக்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், ஏடிஎம் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை குறைக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் மற்றும் ஷாப்பிங் மால்கள், கடைகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதும் கட்டணம் செலுத்துவதும் அதிகரித்து வருகிறது. ஸ்கிம்மிங் மிஷின் மூலம் கார்டு ரகசியங்களை திருடுபவர்கள், போலி கார்டு தயாரித்து பணம் எடுக்கின்றனர்.
card secure
இந்த மோசடியை தீர்க்க அனைத்து வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வரும் செப்டம்பர் 1ம் தேதிக்கு பிறகு இஎம்வி சிப் மற்றும் பின் கொண்ட கார்டுகள்தான் வழங்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது சில வங்கிகள் மட்டுமே சிப் கொண்ட கார்டுகளை வழங்கி வருகின்றன. பெரும்பாலான வங்கிகள் மேக்னடிக் பட்டையுடன் கூடிய கார்டுகளை வழங்குகின்றன. சிப்புடன் கூடிய கார்டுகள் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை. இதை கருத்தில் கொண்டே ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.