September 20, 2021

டீ சாப்பிடணும் போல இருக்கா? இதை கொஞ்சம் படிச்சுட்டு சாப்பிடுங்க!

பால் கலக்காத தேநீரை குடிப்பதால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவு அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது. மேலும் பால் கலக்காத டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் இல்லாத சர்க்கரை குறைவாக இருக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.
.tea oct 11.
பால் கலக்காத சில சுவையான தேநீர் குறிப்புகள்;இவையெல்லாமே உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருபவை
..
துளசி இலை டீ:
சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய், டீத்தூள் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி.
.
கொத்தமல்லி டீ:
கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.
.
புதினா இலை டீ:
புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, டீத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
.
எலுமிச்சை டீ
சூடான கொதிக்க வைத்த டீயில் பாலுக்கு பதிலாக எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் டீத்தூள், நாட்டு சர்க்கரை போட்டு நன்றாக கலந்து குடிக்கவும்.
.
சூடான கார டீ;
..
தண்ணீர்: 2 லிட்டர்
சர்க்கரை: 30 ml
கிராம்பு: 1/2 டீ ஸ்பூன்
ஆரஞ்ச் ஜூஸ்: 150ml
2 எலுமிச்சைபழம் சாறு, பட்டை
.
செய்முறை:
பட்டை, கிராம்பு இவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். டீ தூளை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை போடவும், பழச்சாறுகளை போடவும், தேவையான சூடுக்கு ஆற்றிக் கொள்ளவும். சுமார் 12 பேருக்கு கார டீ பரிமாறலாம்.

மசாலா டீ
கிராம்பு, பட்டை, இஞ்சி, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு கொதித்தவுடன் டீ தூள் ஒரு டீஸ்பூன் போட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வடி கட்டவும்.

(குறிப்பு: பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது மிக மிக நல்லது.)
……
தகவல் : மதுரை ரவி