October 16, 2021

டிவி -யைப் பார்த்து மாணவர்களுக்கு இடையே நடந்த பாக்சிங் போட்டியில் 17 வயது மாணவர் பலி! வீடியோ

டி வி யைப்boxing பார்த்து மாணவர்களுக்கு இடையே நடந்த போட்டியில் 17 வயது மாணவர் பலியானார்.ஹைதராபாத்தில் இந்த சம்பவம் தொடர்பாக மகனின் சாவில் மர்மம் இருப்பதாக மாணவனின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கடந்த 3-ம்தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் தொலைக்காட்சி பெட்டி வைக்கப் பட்டிருந்தது.அதில் மல்யுத்த போட்டிகள் தொடர்பான காட்சிகள் காண்பிக்கப்பட்டன. அதே போல் மாணவர்களும் சக நண்பர்களிடம் குத்து சண்டையில் ஈடுபட்டனர். அதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மாணவன் ஒரு விபத்தில் பலியாகி விட்டதாக மாணவனின் தந்தைக்கு மாணவர்களின் நண்பர்கள் பொய்யான தகவலை அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பொலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்துள்ள போலீசார் அவர்களிடமிருந்து சண்டையின் போது எடுத்த வீடியோவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இறந்த மாணவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.

வீடியோ :