டிவிட்டர் நிறுவனம் பங்குகள் வெளியீடு!

இணையதளத்தில் குறுந்தகவல்களை வழங்கி வரும் டிவிட்டர் நிறுவனம் வரும் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக பங்குகளை வெளியிட உள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்க நிதி அமைச்சகத்தின் விதி முறைகளின்படி இப்பங்கு வர்த்தகம் இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நவின தொழில்நுட்பத்தின் அடையாளங்களாய் திகழ்ந்து வருவது ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் நவின தொழில்நுட்பத்துடன் கூடிய டேப்லட்கள். இவ்வகை தொலை தொடர்பு சாதனங்கள் வாயிலாக இ-மெயில், குறுந்தகவல்கள், செய்திகள் உள்ளிட்டவற்றை நாம் பரிமாற்றி கொள்ள முடியும்.
sep 29 - twitter
இச்சேவை நவீன கண்டுபிடிப்பாக டிவிட்டர் கருதப்படுகிறது. இணையதளத்தில் குறுந்தகவல்கள் பெட்டகமாக கருதப்படும் டிவிட்டர் 2006&ம் ஆண்டு மார்ச் மாதம் ஜேக் டாசி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஜூலை மாதம் இணையதளத்தில் அப்லோட் செய்யப்பட்ட டிவிட்டர் இணையதளத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 20கோடி பேர் வரை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவை தலைமை இடமாக கொணடு இயங்கி வரும் டிவிட்டர் முதல் முறையாக பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கை வரும் நவம்பர் மாதத்தில் பொது பங்கு வெளியீடு இருக்கும் என்று கூறியுள்ளது.

இனிஷியல் பப்ளிக் ஆஃபர் அதாவது முதன்மை பொது பங்கு வெளியீட்டை ஜேபி மார்கன்சிஸ், மார்கன் ஸ்டேன்லி மற்றும் கோல்டு மேன் சாக்ஸ் வங்கிகள் கவனித்துக் கொள்ளும் என்றும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. இதே வங்கிகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை பங்கு வெளியீட்டை கவனித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதத்தின் மத்தியிலேயே பங்கு வெளியீடு இருக்கும் என்று டிவிட்டர் நிறுவனம் கூறியிருந்தது.

ஆனால் தற்போது நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. பங்கு வெளியீடு அமெரிக்க நிதி அமைச்சகத்தின் விதி முறைகளின்படி நடக்கும் என்றும் டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. பங்கு வெளியீடு நிறவனங்கள் அதன் நிதி கட்டணம் குறித்த விவரங்களை 21 நாட்களுக்கு அறிவித்திட வேண்டும் என்பது அமெரிக்க நிதிதுறையின் விதிமுறை ஆகும்.

Report: Twitter Will List on New York Stock Exchange
*********************************************************************
t looks like Facebook’s IPO debacle may cost the Nasdaq one of the most notable tech IPOs of the year.TheStreet reports hearing from multiple sources close to the situation that Twitter will list on the New York Stock Exchange rather than the Nasdaq in an attempt to avoid some of the technical issues that complicated Facebook’s IPO. A glitch with Nasdaq’s system delayed trading by 30 minutes on the day of Facebook’s IPO and led to multiple lawsuits.