October 20, 2021

டிஜிட்டல் போருக்கு தயாராகுங்கள்: முப்படை தளபதிகள் கூட்டத்தில் மோடி!

“எதிர்காலத்தில் பாகாப்பு குறித்த சவால்கள் நமக்கு தெரிந்த ஒன்றாகவே இருக்கும். ஆனால் எதிரிகள்தான் நம் கண்களுக்கு தெரிய மாட்டார்கள். எனவே, அவர்களை சமாளிக்க முப்படைகள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும்.இன்று நிலைமை வேகமாக மாறி வருகிறது. தொழில் நுட்ப முன்னேற்றம் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாக உருவாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் கம்ப்யூட்டர்களின் ஆதிக்கம்தான். இதனால் கடல், வான்வெளி, நிலங்களின் வழியாக எல்லைகளை கண்காணிப்பது சிரமமாக அமையும். எனினும் இவற்றை தடுப்பதில் முப்படைகளின் தாக்கம் இருக்கும். அதேநேரம் முழுமையான போர்களும் அபூர்வமாகிவிடும்.இன்று நாம் டிஜிட்டல் தொழில் நுட்ப உலகில் இருக்கிறோம். எனவே இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் ராணுவப் பிரிவிலும் நமக்குத் தேவை.”என்று முப்படைத் தளபதிகளின் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை தெரிவித்தார்.
pm oct 18
பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்ட பின்பு டெல்லியில் முதல் முறையாக விமானப்படைத் தளபதி அருப் ராஹா, ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக், கடற்படை தளபதி ஆர்.கே.தொவான் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.டெல்லி ராணுவ தலைமையகத்தில் உள்ள ‘வார் ரூம்’ எனப்படும் போர் அறையில் இந்தக் கூட்டம் நடந்தது. இதில் மத்திய ராணுவ மந்திரி அருண்ஜெட்லி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ செயலாளர் ஆர்.கே.மாத்தூர் ஆகியோரும், நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர்.கூட்டத்தில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது குறித்தும், எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

முப்படை பணியாளர் குழுத் தலைவரான அருப் ராஹா இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படையில் பொதுவாக காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் விளக்கி கூறினார்.மேலும், ராணுவ படைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக், கடற்படைத் தளபதி ஆர்.கே.தொவான் ஆகியோர் அண்டை நாடுகளின் சமீபத்திய சவால்கள், பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

பின்னர் பேசிய மோடி எந்த ஒரு குறிப்பையும் எழுதி வைக்காமலேயே முப்படைத் தளபதிகளின் முன்பாக உரையாற்றினார்.
கூட்டத்தில் அவர்,”எதிர்காலத்தில் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளும் விதமாக முப்படைகளின் திறன் மேம்படுத்தப்படும். ராணுவம் முழுமையாக பாதுகாப்புக்கு தயார் நிலையில் இருப்பதற்கும், அதன் குறைபாடுகளில் இருந்து மீள்வதற்கும், தனது நவீன தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

மூன்று படைகளும், கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஒரு அணியைப் போல் இணைந்து செயல்பட்டு கடுமையாக உழைத்து அவற்றின் திறமைகளை மேலோங்கச் செய்திடவேண்டும். இந்த இலக்கை அடைந்திட ஏராளமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதும் அவசியம்.எதிர்காலத்தில் பாகாப்பு குறித்த சவால்கள் நமக்கு தெரிந்த ஒன்றாகவே இருக்கும். ஆனால் எதிரிகள்தான் நம் கண்களுக்கு தெரிய மாட்டார்கள். எனவே, அவர்களை சமாளிக்க முப்படைகள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும்.
pm oct 18.2
இன்று நிலைமை வேகமாக மாறி வருகிறது. தொழில் நுட்ப முன்னேற்றம் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாக உருவாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் கம்ப்யூட்டர்களின் ஆதிக்கம்தான். இதனால் கடல், வான்வெளி, நிலங்களின் வழியாக எல்லைகளை கண்காணிப்பது சிரமமாக அமையும். எனினும் இவற்றை தடுப்பதில் முப்படைகளின் தாக்கம் இருக்கும். அதேநேரம் முழுமையான போர்களும் அபூர்வமாகிவிடும்.இன்று நாம் டிஜிட்டல் தொழில் நுட்ப உலகில் இருக்கிறோம். எனவே இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் ராணுவப் பிரிவிலும் நமக்குத் தேவை.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அமைதியான சூழலும், பாதுகாப்பும் மிகவும் அவசியம்.”என்று அவர் பேசினார்.