September 24, 2021

டிஜிட்டல் இந்தியா குறித்த மோடியின் பார்வை மிகச்சரி! -நாதல்லா சர்டிபிகேட்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சனிக்கிழமை இரவு, நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-4 நாடுகள் மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம், அமெரிக்காவின் மேற்குகடற்கரை பகுதிக்கு விரைந்தார். சிலிக்கான் வேலியில் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை மோடி சுற்றி பார்த்து, விவரங்கள் கேட்டறிந்தார்.
CP4gJIpVEAAeUZs
இதையடுத்து, இந்திய நேரப்படி காலை 6 மணிக்கெல்லாம், ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக்கை சந்தித்தார் மோடி. 15 நிமிடங்கள், நடந்த இந்த சந்திப்பின்போது, இந்தியா வுக்கு தொழில் தொடங்க வருமாறு மோடி அழைப்புவிடுத்தார்.

இதன்பிறகு மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதல்லாவை மோடி சந்தித்தார். முன்னதாக சத்யா நாதல்லா சில இந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “: இந்தியாவுடன் இணைந்து செயல்பட நான் விரும்புகிறேன். இந்தியாவில் மைக்ரோ சாப்ட் 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்திய தொழில் முனைவோர் உலக தரம் உள்ளவர்கள். இந்தியாவிலுள்ள மனித வளம் உலக தரமானது. டிஜிட்டல் இந்தியா குறித்த, நரேந்திரமோடியின் தொலை நோக்கு பார்வை மிகச் ச ரியானது. அவர் சரியான வழியில் கொள்கைகளை புகுத்திக்கொண்டுள்ளார். கிராமங் களையும் இணையத்தால் இணைக்க முயல்கிறார்”enறு சத்யா நாதல்லா தெரிவித்தார்.

சிலிக்கான்வேலியில் நடக்கும் டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி பேசும் நிகழ்வின் வீடியோ\