October 19, 2021

டிச.2ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

ஊதிய உயர்வு கேட்டு தமிழகம் உட்பட 3 மாநிலங்களில் வரும் டிசம்பர் 2ல் வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அண்மையில் தமிழகத்தில், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், 70 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், 4,000 கிளைகள் முழுமையாக செயல்படவில்லை. அன்று மட்டும், 7 லட்சம் காசோலைகள் முடங்கின. இதனால், 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கபட்டது நினைவிருக்கும்
bank strike nov 17
இந்நிலையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். வங்கிகள் தனியார் மயமாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறுபடியும் அகில இந்திய அளவில் நான்கு மண்டலமாக பிரித்து வரும் டிசம்பர் 2ம் தேதி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக தஞ்சையில் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் மாநில பொது செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார்.