September 27, 2021

டாஸ்மாக் மதுபான விலை புத்தாண்டு முதல் மீண்டும் உயர்வு!

அண்மையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டாஸ்மாக் மதுபானங்கள் அடுத்தடுத்து 2 முறை அதிகரித்த நிலையில் தற்போது மறுபடியும் புத்தாண்டு முதல் மினிமம் 40 ரூபாய் வரை விலை அதிகரிக்கும் என்று வெளியான தகவலால் தமிழக‘குடிமகன்கள்’ மட்டுமின்றி கேரளா ஆல்கஹாலிஸ்டுகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
tasmac revenue 1a .new
தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுபான விற்பனையை அப்போதைய அதிமுக அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் தொடங்கியது. அப்போது தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்து 800 கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு தற்போது 6600 கடைகள் உள்ளன.

20032004 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1500 கோடி வருமானம் கிடைத்தது. தற்போது 201314 நிதியாண்டில் அந்த வருமானம் ரூ.24 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.டாஸ்மாக்கில் மாநிலம் முழுவதும் கடை சூபர்வைசர், பார் சூபர்வைசர், விற்பனையாளர், பார் உதவியாளர் என மொத்தம் 28 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். சூபர்வைசர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.6,500ம் விற்பனையாளர், பார் உதவியாளருக்கு ரூ.4,300ம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. அரசின் இலவச திட்டங்கள் அனைத்தும் டாஸ்மாக் வருமானத்தை நம்பியே உள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் மதுபான விலையை அரசு கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து உயர்த்தியது.ஜனவரி முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதால் இனி ரூ.100க்கு குறைந்து குவார்ட்டர் பாட்டில் கிடைக்காது. அதிகபட்சமாக ரூ.40 வரை மதுபான விலை உயர்த்தப்பட உள்ளது. புத்தாண்டு முதல் (ஜனவரி 1, 2015) இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை மதுபான விலை அதிகரிக்கும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.