October 19, 2021

டாஸ்மாக் மதுபான விலை நாளை முதல் மீண்டும் உயர்வு!

தமிழகத்தில் நாளை முதல் அரசு மதுபானக் கடைகளில் மதுபான விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஒரு பீர் விலை ரூ.10 உயர்த்தப்படுகிறது. ஒரு குவாட்டர் சாதாரண மது ரூ.8ம், நடுத்தரம் ரூ.10ம், உயர் ரகம் ரூ.30ம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது.
tasmac revenue 1a
தமிழகத்தில் அரசுக்கு வருவாய் ஈட்டித்தருவதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாநிலம் முழுவதும் 6,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுபானங்களின் விலையை மீண்டும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் மூலம் கடை மேற்பார்வையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி 180 மில்லி கொண்ட குவார்ட்டர் மது பாட்டில் தற்போது ரூ.80க்கு விற்கப்படுகிறது. இது ரூ.90ஆக உயர்த்தப் படுகிறது.375 மில்லி கொண்ட ஆஃப் மது பாட்டில் ரூ.160ல் இருந்து ரூ.180ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 750மில்லி அளவுள்ள ஃபுல் மதுபாட்டிலின் விலை ரூ.390ல் இருந்து ரூ.430ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
tasmac revenue
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ அண்மையில் பால் விலை ஏற்றத்திற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த விவகாரத்தை திசைத் திருப்ப சாதாரண மது வகைகள் அதன் அளவுக்கேற்ப ரூ.10முதல் ரூ.40வரை மறுபடியும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரிமியர் ரகங்களை பொறுத்தவரை ரூ.180க்கு விற்கும் குவார்ட்டரின் விலை ரூ.30 உயர்ந்துள்ளது. ரூ.375க்கு விற்கும் ஆஃப் விலை ரூ.60 உயர்ந்துள்ளது. ரூ.750க்கு விற்கும் ஃபுல் விலை ரூ.120 உயர்ந்துள்ளது. இம்முறையும் மொத்தத்தில் டாஸ்மாக் சரக்குகள் ரூ.10 முதல் ரூ.120 வரை விலை உயர்ந்துள்ளது’’ என்றனர்.