October 19, 2021

ஜோதிகாவின் 36 வயதினிலே! – ஆல்பம்

மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆனத் திரைப்படம் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’. நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிய இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரித்துள்ளார்.

சில வருடங்கள் நடிப்புக்கு ஓய்வு தந்திருந்த நடிகை ஜோதிகாவின் ரீ-என்ட்ரி படமாக இது பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்ட போது. எந்த ஒரு காட்சிக்கும் ஆட்சேபனை சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

இதையடுத்து மே 8ம் தேதி இப்படத்தை வெளியிட தீர்மானித்திருத்தார்கள். ஆனால், “வாடி ராசாத்தி” பாடலுக்கு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டடு தற்போது அப்பாடல் பணிகளையும் முடித்து படத்துடன் இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். எனவே மே 15ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவாம்!