October 20, 2021

ஜெ. வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஹஒகோர்ட்டில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
jaya may 8
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணை முடிந்து விட்ட நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு மே 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
judgement day
தீர்ப்பு வெளியாவதையொட்டி, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களும், மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் பெங்களூருவில் இப்போதே குவிய ஆரம்பித்து விட்டனராம்