September 18, 2021

ஜெ. முதல்வர் ! – நியூயார்க் டைம்ஸ் பாராட்டுறாக.. பெங்களூரில் லைவ் பண்ணிணாக!

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை தொடர்ந்து, அவர் முதல்-அமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த செய்தியானது உலகின் மிக பிரபலமான செய்தி நிறுவனமான நியூ யார்க் டைம்ஸின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
jaya may 24
‘இந்தியன் மினிஸ்டர் இஸ் பேக்’ என தலைப்பிட்டுள்ள நியூ யார்க் டைம்ஸ், ஜெயலலிதாவை இந்தியாவின் வலிமைமிக்க தலைவர்களில் ஒருவர் என குறிப்பிட்டுள்ளது. மேலும் அ.தி.மு.க – வை பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்பதையும் தெரிவித்துள்ளது.

மேலும் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியை இந்தியாவிலுள்ள ஆங்கில்ச் சேனல்கள் உள்பட பல்வேறு முக்கிய செய்திச் சேனல்கள் நேரடியாகவே ஒளிபரப்பின.
தமிழகத்தில் மட்டும் அல்லாமல், கர்நாடக தொலைக்காட்சிகளும், ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பியுள்ளன.

பெங்களூருவில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, கர்நாடக மக்களுக்கும், ஜெயலலிதா மீதான ஆர்வம் அதிகரித்தது. ஜெயலலிதா குறித்த செய்திகளை அறிந்து கொள்வதிலும் கர்நாடக மக்கள் ஆர்வம் காட்டுவதே, இந்த நேரடி ஒளிபரப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.