September 20, 2021

ஜெ. முதல்வராக தடை கோரியவருக்கு ரூ. 25 ஆயிரம் ஃபைன்!

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஹைகோர்ட்டில் ஆர். குர்கர்னிக்கு எனபவர் பொது நல அவழக்கு ஒன்றை தக்கல் செய்தார். இந்த் பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
cm jaya
கர்நாடக ஹைகோர்ட்டின் விடுமுறைக் கால நீதிபதிகள் வேணுகோபால் கவுடா மற்றும் வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.இந்த மனு விசாரணையின் முடிவில் நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

மேலும் விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்கில் பொதுநல வழக்கு தொடர்ந்ததாக மனுவை தாக்கல் செய்த வழக்குரைஞர் ஆர். குர்கர்னிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.இதனிடையே மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் தே.மு.தி.க. வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் “கர்நாடக ஐகோர்ட்டு ஜெயலலிதாவை விடுவித்து அளித்துள்ள தீர்ப்பில் குளறுபடி உள்ளது. கீழ்கோர்ட்டு அளித்த தீர்ப்பு சரியா, ஐகோர்ட்டு தீர்ப்பு சரியா என்பதை சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்ய வேண்டும்.நான் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை ஜெயலலிதா முதல்–அமைச்சராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்.”என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிராபிக் ராமசாமியும் இது போன்ற மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.