October 18, 2021

கைதி எண் – 3312 – லாலுவின் ஜெயில் எக்ஸ்பீரியன்ஸ்!

கால்நடை தீவன ஊழலில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார்.அவருக்கு சிறையின் மேல் தளங்களில் தனி அறை, மரக்கட்டில், கொசுவலை, டிவி, சமையல் செய்ய 2 கைதிகள், படுக்கை விரிப்பு, குர்தா, வேட்டி, பைஜமா, டவல், கம்பளி கோட், கம்பளி சட்டை, பேண்ட், தலையணை உறை, பஞ்சு மெத்தை. பத்திரிகை, கதை புத்தகங்கள், நாவல்கள் வாங்கி படிக்கலாம். குடும்பத்தினரை தினமும் பார்க்கலாம் என்று ராஜ வாழ்க்கைதான் வாழ்கிறார்.
2 - lalu yadhav
கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பீகார் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், தற்போதைய எம்.பி. என அந்தஸ்துகள் இருப்பதால், சிறையில் அவருக்கு விஐபி வசதி வழங்கப்படுகிறது. சிறையில் அடைக்கப்படும் ஒவ்வொரு கைதிக்கும் எண் வழங்கப்படுவது நடைமுறை. இதன்படி, லாலுவுக்கு எண்- 3312 வழங்கப்பட்டுள்ளது.சிறை விதிமுறைப்படி முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், பேரவை சபாநாயகர்கள் மற்றும் இன்னாள் எம்.பி., எம்எல்ஏ.க்கள், முன்னாள், இன்னாள் கலெக்டர்கள் மற்றும் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கைதிகளுக்கு விஐபி வசதி அளிக்கப்படுகிறது.

சிறையின் மேல் தளங்களில் தனி அறை, மரக்கட்டில், கொசுவலை, டிவி, சமையல் செய்ய 2 கைதிகள், படுக்கை விரிப்பு, குர்தா, வேட்டி, பைஜமா, டவல், கம்பளி கோட், கம்பளி சட்டை, பேண்ட், தலையணை உறை, பஞ்சு மெத்தை. பத்திரிகை, கதை புத்தகங்கள், நாவல்கள் வாங்கி படிக்கலாம். குடும்பத்தினரை தினமும் பார்க்கலாம்.

தின உணவு: 350 கிராம் உயர்ரக அரிசி, 117 கிராம் பருப்பு, 233 கிராம் காய்கறி, 233 கிராம் உருளைக்கிழங்கு, 467 கிராம் பால் அல்லது தயிர், 175 கிராம் ஆட்டுக்கறி கோழிக்கறி அல்லது மீன், 229 கிராம் நெய், 11 கிராம் சர்க்கரை மற்றும் பழவகைகள். தவிர, வெளியில் இருந்து உணவு வாங்கி கொள்ளலாம்.

மேலும் சிறையில் அடைபட்ட முதல் நாள்முழுவதும் மூட்டைபூச்சி மற்றும் கொசுக்கடி தொல்லையால் தூங்க முடியாமல் அவதிப்பட்ட லாலு, அதிகாலை வேளையில் கண்ணயர்ந்தார். காலை 7 மணியளவில் கண் விழித்த அவர் சிறை வளாகத்தினுள் ஒருமுறை சுற்றி வந்தார். கொசு தொல்லை மற்றும் மூட்டைபூச்சி கடி பற்றி சிறை அதிகாரியிடம் அவர் புகார் கூறினார்.

பின்னர், செய்தி தாள்களை சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்த லல்லு, டி.வி. செய்திகளையும் பாரத்துவிட்டு தேநீர் குடித்தார். அவருக்கு 3312 என்ற கைதி எண்ணையும், குற்றேவல் புரிய 2 தண்டனை கைதிகளையும் சிறை அதிகாரிகள் வழங்கியுள்ளனராம்.

PRISONER NO 3312 LALU PRASAD WEARS JAIL UNIFORM INSIDE RANCHI’S BIRSA MUNDA JAIL
*****************************************************************
Bihar’s Rashtriya Janata Dal supremo Lalu Prasad spent Monday night inside Ranchi’s Birsa Munda jail after he was convicted by a CBI court in fodder scam. He has been allotted prisoner number 3312.

கார்டுன்:indiatoday