September 18, 2021

ஜெயம் ரவி + ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜுலியட்

ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா மோத்வானி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளன படத்திற்கு “ரோமியோ ஜூலியட்” என தலைப்பு வைத்திருககிறார்கள்.படத்திற்கான கதையை எழுதி இயக்குகிறார் லஷ்மன். இவர் பல விளம்பரப்படங்களை இயகியத்துடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான். மச்சக்காரன், நியூட்டனின் 3ஆம் விதி போன்ற படங்களை தயாரித்த எஸ்.நந்தகோபால் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
romio july 2
படம் பற்றி இயக்குனர் லஷ்மன்….”பேண்டஸியான காதல் கதை இது. ஜாலியான காதலை எப்படி ஜாலியாக சொல்கிறோம் என்பது திரைக்கதை.இந்த 2014 – ல் 1947 களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கும் ஹீரோவும், இதே 2014 – ல் 2025 – ல் தான் வாழ்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கால்குலேட்டிவாக யோசிக்கும் ஹீரோயின் இவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட சுவாரஸ்யமான காதலை ஜாலியாக சொல்வதே இந்தப்படம்.” என்கிறார்.