October 24, 2021

ஜெயம்ரவி – ஹன்சிகா – பூனம்பாஜ்வா நடிக்கும் ”ரோமியோ ஜூலியட்” -ஆல்பம்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ ரோமியோ ஜூலியட்” ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி – பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.கதை, திரைக்கதை எழுதி இயகுகிறார் லக்ஷ்மன் .இந்தப் படத்திற்காக மும்பையிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான முறையில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.ஜூலியட் ரோமியோ” என்ற பாடல்காட்சியில் ஜெயம்ரவி – ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா பங்கேற்றனர்.. மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளுக்கு இமான் இசையமைத்த இந்த பாடல் காட்சி மிகப் பிரமாண்டமான முறையில் படமாகப் பட்டுள்ளது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பாரீன் டான்சர்கள் பங்கேற்றனர். இந்த பாடலை மும்பையின் பிரபல பாடகரான விஷால் தட்லாணி பாடி இருக்கிறார்.அத்துடன் “ அடியே அடியே – என்
வாழ்கையை வீணாக்க பொறந்தவளே “ என்ற பாடல் காட்சியில் ஜெயம்ரவி – ஹன்சிகா பங்கேற்க சென்னை அருகே துறைமுகம், காசிமேடு மற்றும் விமான நிலையம் போன்ற இடங்களில் நடைபெற்றது. மிக பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தை தயாரிக்கும் எஸ்.நந்தகோபால் கூறியதாவது… ஜாலியான படமாக ரோமியோ ஜூலியட் உருவாகிறது என்றார். படத்திற்கு சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது…டப்பிங் நடைபெற்ற தியேட்டரிலிருந்து படத்தின் சில காட்சிகளை பார்த்து பரபரப்பாக பேசுகிறார்கள் என்றார்.