September 29, 2021

ஜூன் 1–ந் தேதி 14 சதவீதம் ஆகிறது சேவை வரி- மத்திய அரசு அறிவிப்பு!

தற்போது, கல்வி வரியையும் சேர்த்து, சேவை வரி 12.36 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.இந்த 14 சதவீத சேவை வரி, ஜூன் 1–ந்தேதி அமலுக்கு வருவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
tax service
சேவை வரியை மறைமுக வரி என்றும் சொல்வார்கள். மக்களின் கண்களுக்கு அகப்படாமல் இடப்படும் வரி என்பதாலேயே இதற்கு இந்தப் பெயர். இதை அதிகப்படுத்தினால் சாமானிய மனிதனால் எதிர்க்க முடியாது. நாளாக நாளாகச் சேவை வரி உயர்வால் உண்டாகும் பாதிப்புகளுக்கு மக்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள் என்கிற அரசாங்கத்தின் நினைப்பே மேலும் மேலும் அவர்களைச் சேவை வரியை அதிகரிக்கத் தூண்டுகிறது’

இதன்மூலம், உணவகங்களில் சாப்பிடுதல், காப்பீடு, டெலிபோன் பில், விளம்பரம் செய்தல், விமான பயணம், சிலவகை கட்டுமானங்கள், கிரெடிட் கார்டு, நிகழ்ச்சி ஏற்பாடு, சுற்றுலா ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும். இனி கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில், மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரது ஒரு மாதத்திற்கான செலவினங்கள் தோராயமாக தரப்பட்டிருக்கின்றன. இந்த சேவை வரி 12.36 சதவிகிதமாக இருந்தபோது எவ்வளவு ரூபாய் சேவை வரியாகக் கட்ட வேண்டி இருந்தது, இனி ஜுன் 1-ம் தேதி 14 சதவிகிதமாக அதிகரித்திருக்கும் நிலையில் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மாதாந்திர பட்ஜெட்டில் அதிகரிக்கும் தொகை எவ்வளவு என்பதையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
sevai vari