October 19, 2021

ஜுனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். இந்த போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்தியா 40 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
Criket India, Pakistan, U-19 WC_
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் (19 வய துக்குட்பட்டோர், 50 ஓவர்) துபாய், அபுதாபி, ஷார்ஜா மைதானங்களில் பிப். 14ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள விஜய் ஜோல் தலைமையிலான நடப்பு சாம்பியன் இந்திய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை துபாயில் நேற்று எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்தது. 94 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த போதிலும் அணியை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய மும்பையைச் சேர்ந்த சர்ப்ராஸ் கான் 74 ரன்னும் (78 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் 68 ரன்னும் விளாசி அணி சவாலான ஸ்கோரை எட்ட வித்திட்டனர்.

பின்னர் 263 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானுக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல்-ஹக் (39 ரன்கள்), கேப்டன் கேப்டன் சமி அஸ்லாம் முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் (23.4 ஓவர்) குவித்து வலுவான அடித்தளம் உருவாக்கி கொடுத்தனர். சமி அஸ்லாம் 64 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக மாறியது. கிடைத்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ள தவறிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள், இந்திய சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் நடையை கட்டினர். 48.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீபக் ஹூடா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய வீரர் சர்ப்ராஸ் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்திய அணி 2-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் நாளை மோதுகிறது.

U-19 World Cup UAE 2014 : India beat Pakistan
****************************************************************
Sarfaraz Khan and Sanju Samson hit excellent half-centuries and Deepak Hooda took five wickets as defending champion India defeated two-time former winner and traditional rival Pakistan by 40 runs on day two of the ICC Under-19 Cricket World Cup UAE 2014 at the Dubai International Cricket Stadium here on Saturday.