November 29, 2021

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்!

ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அப்பெ இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்

ஜப்பான் பிரைம் மினிஸ்டர் ஷின்ஜோ அப்பெ உடல் நலம் இல்லாமல் அவதிப்படுகிறார். அவர் உடல்நிலை மோசமாகி வருவதால் ஆட்சிப் பணிகளை முழு கவனத்துடன் கவனிக்க இயலாமல் போய்விடும் என்று அவர் அஞ்சுகிறார். அதன் காரணமாக அவர் தனது பிரதமர் பதவியை வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு ராஜினாமா செய்கிறார் என்று பத்திரிகைகள் கலையிலேயே செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் 2 முறை அவர் மருத்துவமனைக்கு உடல் சோதனைகளுக்காக சென்றார். எதற்காக அவர் உடற் சோதனைகள் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு ஷின்ஜோ அப்பெ செய்தியாளர்களிடம் பேசும் பொழுது தன்னுடைய உடல் நலக்குறைவு பற்றியும் அவர் தெரிவிப்பார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்ட.து போல், செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசுகையில் ‘‘எனக்கு உடல்நல பாதிப்பு மோசமடைந்துள்ளதால் நாட்டை வழி நடத்துவதில் சிக்கல் உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு ஏற்ப செயல்பட முடியவில்லை. எனவே எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன்.’’ எனக் கூறினார்.

ஜப்பானில் அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே (வயது 65). ஜப்பானின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான பிரதமர் ஷின்சோ அபே அதிக காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையை கொண்டுள்ளவர். ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய உதவிய தலைவர் என்ற பெருமையையும் கொண்டவரிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷின்ஸோ அபே விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து ”எனது நண்பரான ஷின்ஸோ அபே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. தங்களது தலைமையிலான அரசு மற்றும் தங்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு காரணமாக இந்தியா – சீனா இடையேயான உறவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மேலும் வலுவடைந்துள்ளது. தாங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.