September 26, 2021

ஜனவரி 17 -ல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்;ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராகிறார்?

சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் மக்களவைத் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தீர்மானித்துள்ளது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு ஜனவரி 17ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தினந்தி அறிவித்துள்ளார்.
raghul owl 16
இந்த டெல்லி மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து அவரும் தேசிய அளவில் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அவருக்கு எதிராக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சித் தலைமையை காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

Will Congress declare Rahul as PM candidate at AICC meet in January?

*********************************************************

Congress will hold a meeting of AICC in New Delhi on 17 January to prepare its strategy for the Lok Sabha polls, triggering speculation that Rahul Gandhi may be anointed the party’s Prime Ministerial candidate.