September 26, 2021

சோளக்காம்பு உதவியால் தண்ணீரை சுத்தமாகும்! – கூகுள் அறிவியல் விருது வென்ற இந்திய மாணவி!

ஒடிசாவை சேர்ந்த பள்ளி மாணவி குறைந்த செலவில் சோளக்கம்பு உதவியுடன் சுத்தமான தண்ணீரை பெறுவதற்கான எந்திரத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இதையடுத்து லலிதா பிரசிதா ஸ்ரீசாய் என்ற 11ம் வகுப்பு மாணவிக்கு நேற்று அமெரிக்காவின் கலிபோர் னியாவில் ”Community Impact Award” என்ற விருது கூகுள் அறிவியல் கண்காட்சியில் வழங்கப் பட்டுள்ளது.மேலும், குறைந்த செலவில் சுத்தமான தண்ணீரை பெறுவதற்கான எந்திரத்தை வடிவமைத்துள்ள லலிதாவிற்கு 10,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
lady sep 23
டெல்லி பப்ளிக் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயில்கிறார் ஸ்ரீ சாய் லலிதா. 13 வயதான இவரது கண்டுபிடிப்புதான் சோளக் காம்பு முனை மூலம் தண்ணீரை சுத்தப் படுத்துவது. இன்றையக் காலக் கட்டத்தில் நவீன முறையெனக் கூறி ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக் கொல்லி, மனிதக் கழிவுகளை தண்ணீருடன் கலப்பது என பல்வேறு ரசாயன கலப்புகளால் கடல் வாழ் உயிரினங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இக்கழிவுகளை அகற்றத்தான் சோளக் காம்பு முனையை பயன்படுத்துகிறரர் ஸ்ரீ சாய் லலிதா.

மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களின் வாழ்வாதாரமான விவசாயத்தில் கோதுமை, அரிசிக்கு அடுத்தபடியாக அதிகம் விளைவது சோளம். இளம் சோளத்தை உணவாக உபயோக்கும் போது முதிர்ந்த சோளம் பயனற்று உயிர் கழிவாகப் போகிறது. இந்த சோளக் காம்பு முனையை விலங்குகள் கூட உட்கொள்வதில்லை. காரணம் அது உணவுக் குழாயை அடைத்து, இறப்பைக் கூட ஏற்படுத்திவிடும்.இந்நிலையில் Adsorption என்னும் தொழில்நுட்பத்தை சோளக் காம்பு முனையில் உபயோகித்து தண்ணீர் கழிவுகளை அகற்றும் முறையை கண்டு பிடித்திருக்கிறார் ஸ்ரீ சாய் லலிதா. மூலக்கூறுகள், அணுக்கள் முதலியன மேற்பரப்பில் ஒட்டிக்கொள்வதே Adsorption முறையாகும். வீட்டு, தொழிற்சாலை கழிவுகளை எளிமையாகவும் மலிவாகவும் சுத்தம் செய்ய சோளக் காம்பு முனையை பயன்படுத்தலாம். இந்நாள் வரை உயிர் கழிவாக கருதப்பட்ட சோளக் காம்பு முனையை மேற்கூறிய முறையில் உபயோகித்தால் பல நீர் நிலைகள் காப்பாற்றப்படும் என்பது ஹேப்பி நியூஸ்தானே!