September 20, 2021

சோலார் பவரில் கடல்நீர் குடிநீராகும் நியூ டெக்னாலஜி! – வேலூர் மாணவிக்கு ரூ.16 லட்சம் பரிசு

இங்கிலாந்தில் நடந்த புதிய ஆராய்ச்சி போட்டியில் சோலார் பவர் உதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த வேலூர் மாணவிக்கு 2-வது பரிசான ரூ.16 லட்சம் கிடைத்தது.
lady sep 15
இங்கிலாந்து நாட்டின் ஆம்ஸர்டாம் நகரை தலைமை இடமாக கொண்டு ‘ஆர்எல்இஎக்ஸ் குரூப்’ நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் பெருகி வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், சுகாதாரம் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கான 2015 குரூப் என்விரோமெண்டல் என்ற போட்டியை அறிவித்திருந்தது. இந்த போட்டி உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்களின் கண்காணிப்பில் நடந்தது. இதில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி., ஆராய்ச்சி மாணவியான டெவிலினாதாஸ் உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாணவி டெவிலினாதாஸ் சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக்கி, அதனை வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் வினியோகம் செய்வதற்கான ‘சலினோ’ என்கிற புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். இந்த புதிய கண்டுபிடிப்பில் சூரிய ஒளி சக்திக்காக பயன்படுத்தப்படும் பேனல் உள்ளிட்ட கருவிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக போட்டியை நடத்தும் குழுவினர் இந்த சலினோ ஆராய்ச்சியை 2-வது இடத்திற்கு தேர்வு செய்து அதற்கு பரிசு தொகையான 25 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கி பாராட்டியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.16 லட்சம் ஆகும்.