October 18, 2021

சோனியா மருமகன் வதேராவின் நில மோசடியை விசாரிக்க பா.ஜ.க. போர்கொடி!

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா செய்துள்ள நில மோசடி பற்றி விசாரிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.பி.க்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.அம்மாநில முதல்வர் வசுந்தரராஜ சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், சோனியா மருமகன் ராபர்ட் வதேரா செய்த நிலமோசடி பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அரசு ஆவணங்களில் வதேரா திருத்தம் செய்தது உண்மை என்று தெரிய வந்தால் அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்களின் இந்த திடீர் நடவடிக்கை சோனியாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
robert-Vadra
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 4 ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களுக்கு பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் ஏராளமான நிலங்களை வதேரா வாங்கியுள்ளார்.இந்த நிலையில் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பயன்படுத்தி வதேரா நில மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. காங்கிரஸ் ஆட்சி உதவியுடன் வருவாய் துறையில் குறுக்கிட்டு, நிலங்களை அவர் மிக, மிக குறைந்த விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.இதற்காக அரசு ஆவணங்களை திருத்தியதாகவும் ராபர்ட் வதேரா மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.பி.க்கள், அம்மாநில முதல்–மந்திரி வசுந்தரராஜ சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா செய்த நிலமோசடி பற்றி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு ஆவணங்களில் வதேரா திருத்தம் செய்தது உண்மை என்று தெரிய வந்தால் அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். பா.ஜ.க. எம்.பி.க்களின் இந்த திடீர் நடவடிக்கை சோனியாவுக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

Need probe into Robert Vadra land deals in Rajasthan: Bikaner MP
************************************************************************************
Five Rajasthan BJP MPs have written to Chief Minister Vasundhara Raje demanding a probe into land deals by Congress President son-in-law Robert Vadra. A BJP MP from Bikaner Arjun Ram Meghwal said that the previous government did not do anything against Vadra because of his ties with them. That’s why we asked the current Chief Minister to take action.