October 19, 2021

செவ்வாய் பயணம் போகத் தயாராகும் 13 வயதான சிறுமிக்கு நாசா பயிற்சி

அடுத்த பத்தாண்டில் – அதாவது 2034ல் செவ்வாய் கிரகத்தில் காலடி வைக்க தயாராகி வருகிறார் 13 வயது சிறுமி ஒருவர்.அந்த அதிர்ஷ்டத்தைப் பெற்றவர் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த அலிஸ்ஸா கார்சன்.இதற்காக அவருக்கு இப்போதிருந்து பயிற்சி அளிக்க முன் வந்துள்ளது அமெரிக்க விண்வௌி ஆராய்ச்சிமையமான நாசா. இந்த 13 வயது என்பதெல்லாம் ஒரு தடையே இல்லை என்கிறது நாசா.
mars Alyssa_Carson4
இது குறித்து .நாசா செய்தி தொடர்பாளர் பால் போர்மேன் கூறுகையில், அலிஸ்ஸா கார்சனுக்கு செவ்வாய் கிரக பயணத்திற்கு பயண்மாக இப்போது சரியான வயதுதான் ஆகிறது.உண்மையில் ஒரு இவர் விண்வெளி வீராங்கணையாக வல்ம் வருவார். அதற்கு தற்போதே சரியான முடிவு எடுத்துள்ளார்.அதற்கு நாங்கள் சரியான வழிமுறைகளை பயிற்சி கொடுத்து வருகிறோம் ”என்றார்.

இது குறித்து பெண்ணின் தந்தை பெர்ட் ”விண்வெளி ஆபத்துக்கள் குறித்து அவளிடம் கலந்து ஆலோனை செய்துள்ளேன். அவள் அவளது முடிவில் திடமாகவும் 2034ல் தனது கனவுகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது” என்று தெரிவித்தார்.இதனால் நாங்கள் அவளது விருப்பத்தை அறிந்து முழு ஊக்கம் அளித்து வருகிறோம் என்றார்.

அலிஸ்ஸா, கட்நத 9 ஆணடுகளாக ஸ்பெயின்,பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நடந்த நாசா விண்வெளி முகாம்களில் கலந்து கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முடிவில் உறுதிப்பாட்டை பார்த்து பல்வேறு சர்வதேச விண்வெளி நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.