September 29, 2021

செவ்வாய் கிரக ஆய்வுக்காக விண்ணில் நவ. 5 ல் பாய்கிறது மங்கள்யான்!

உலக அளவில் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தும் 6 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதேபோல, விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து பூமிக்கு தகவல் பெறும் 4 நாடுகள் பட்டியலிலும் இந்தியா இடம் பிடித்திருப்பது பெருமைக்குரியது. இதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அதுமட்டுமன்றி, தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதிலும், ஏவுகணை, செயற்கைக்கோள் ஆகியவற்றை வடிவமைப்பதிலும் பிற நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது.இந்நிலையில்,இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை அமைத்துள்ளது.
22 - mangalyaan-probe.
இந்த மங்கள்யான் விண்கலம், 25 நாட்கள் பூமியை சுற்றிவரும். 9 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை சென்றடையும்.பெங்களூரு, ஆமதாபாத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், முழுமையாக இந்தியத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றியுள்ளது. இது 300 நாள்கள் பயணம் செய்து செவ்வாய்க்கிரகத்தில் உள்ள சூழல், கனிம வளம், உயிரினங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பூமிக்கு தகவல்கள் அனுப்பும்

மங்கள்யான் விண்கலம் நவம்பர் 5 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.அன்று பிற்பகல் 3.28 மணிக்கு ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி.-25 மூலமாக மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

India’s Mars mission to lift off on November 5

********************************************************
India’s maiden mission to Mars will be launched on November 5 from Sriharikota in Andhra Pradesh, the Indian Space Research Organisation or ISRO said.