September 17, 2021

செல்பி பிரியர்களுக்கான நவீன ஸ்மார்ட் போன் வந்தாச்!

மாடர்ன் உலகமாகி விட்ட இன்றைய காலக்கட்டத்தினர் ஒரு நாளைக்கு சராசரியாக 14 முறை செல்பி எடுப்பதாக கூகுள் நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி 11 மணி நேரம் அவர்களுடைய மொபைலை உபயோகிப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்படி 14 செல்பிகள் எடுப்பது உள்பட 16 முறை புகைப்படமோ /வீடியோவோ எடுப்பதாகவும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை குறைந்தது ஒரு நாளைக்கு 21 முறை பார்ப்பதாகவும், 25 முறை குறிஞ்செய்திகள் அனுப்படுவதாகவும் தெரிகிறது. மேலும் உலகத்தில் உள்ள பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய புகைப்படத்தை எடுத்து இணையதளத்தில் வெளியிடுகின்றனர். இந்நிலையில் செல்பி எடுப்பது மனநிலை நோய் நிலையா? என்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில், ஹானர் 7i என்ற ஸ்மார்ட்போனை சீனாவின் ஹுவாவே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமராவை, செல்ஃபி மோகத்துடன் இருக்கும் ஆட்களுக்கு பிடித்தமாதிரி வடிவமைத்துள்ளனர்.
china phone aug 24
ஹானர் 7i-ன் பின் கேமரா 13 மெகா பிக்சல் மற்றும் ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டது, அதில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? பின் கேமராவை ஃபிளாஷுடன் சேர்த்து 180 டிகிரிக்கு திருப்ப முடியும். ஏற்கனவே சில ஸ்மார்ட்போன்கள் கேமராவை திருப்பும் வசதியுடன் வெளியிடபட்டிருந்தன. எனினும், இது செல்ஃபி விரும்பி களுக்கென பிரத்யேகமாக கேமராவை விருப்பப்படி திருப்பிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இருளிலும் இனி நல்ல செல்ஃபி எடுத்துக் கொள்ள இந்த ஸ்மார்ட்போன் வழிவகுக்கும். 5.2 இன்ச் அளவுகொண்ட ஹானர் 7i, 1080பி ஸ்கிரினும், 616 ஸ்நேப்டிராகன் புராஸஸர், இரு நேனோ சிம்கள், 16GB உள்ளடக்க மெமரி மற்றும் 2GB ரேம் வசதியுடன் கிடைக்கிறது. அது மட்டுமின்றி 32GB உள்ளடக்க மெமரி, 3GB ரேம் வசதியுடன் இன்னொரு மாடலும் சீனாவில் மட்டும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது ஹானர் 7i வெள்ளி மற்றும் தங்க நிறத்தில் சுமார் ஆயிரத்து அறுநூறு யுவானிலிருந்து (இந்திய மதிப்பில் சுமார் பதினாறு ஆயிரத்துக்கு) விற்பனை தொடங்குகிறது.இதே நிறுவனம்தான் கடந்த ஆண்டு குருப்ஃபி எடுக்கும் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது