October 17, 2021

செல்பியால் ஏற்படும் உயிரிழப்புகள் ! – இந்தியாவில்தான் அதிகமாமே!

சமீப காலமாக உலகம் முழுக்க செல்பி எனப்படும், தங்களைத் தாங்களே புகைப்படம் எடுத்துக் கொள் (ல்லு)ளும் மோகம் அதிக வேகமாகப் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு மன நிலையை பாதித் துள்ளது என்றால் லெபனானில் ஒரு வெட்டியான் பல நாட்களுக்கு முன் இறந்து போன தன் தாயார் பிணத்தைத் தோண்டி எடுத்து அந்தப் பிணத்தோடு செல்பி எடுத்தக் கொண்டுள்ளார்.
modi selfi
இது மாதிரி வித்தியாசமான கோணங்களில் தன்னைப் புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளங் களில் பதிவிட்டு, நிறைய லைக்ஸ் பெற வேண்டும் என்பதற்காக இரயிலின் மேல் ஏறி செல்பி எடுக்க முயன்று மின்சாரத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் இங்கே நிகழத்தான் செய்துள்ளது. செல்பி மோகத்தால் மலைக்குன்றின் மேலிருந்து, மலை மற்றும் கடல் இரண்டையும் சேர்த்து செல்பி எடுக்க முயன்ற ஒரு தம்பதி நிலை தடுமாறி கடலில் விழுந்து இறந்த சோகமும் நடந்தேறியுள்ளது. அதுவும் தங்களது ஐந்து மற்றும் ஆறு வயது குழந்தைகள் கண்ணெதிரிலேயே. இது நடந்தது போர்ச்சுக்கலில்.

இப்படி வித்தியாசமான கோணங்களில் தங்களைத் தாங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப் பட்டு உயிரிழப்போர் மட்டுமின்றி, இதனால் மானத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்ப வங்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஒரு பெண் இணையத்தில் வெளியிட்ட செல்பியை யாரோ ஒருவன் எப்படியோ எடுத்து, ஆபாச இணையதளத்தில் வெளியிட அந்தக் குடும்பமே தற் கொலை செய்து கொண்டு மடிந்தது.இந்நிலையில் இந்தியாவில் சமீபகாலமாக, செல்பியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரபல செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் சென்ற ஆண்டு மட்டும் 27 பேர் செல்பி எடுத்துக் கொள்ளும் போது உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், பாதி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். மதுராவிற்கு அருகில் உள்ள கொசிகலாவில் 3 கல்லூரி மாணவர்கள் ஓடும் ரெயிலின் முன் செல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல், 7 இளைஞர்கள் தனது நண்பனின் பிறந்தநாளை படகில் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது செல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக படகு கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தவிர, தமிழகத்தின் நாமக்கல்லில் ஒரு இளைஞர் உயர்ந்த பாறையின் மீது செல்பி எடுக்க முயற் சித்த போது கால் தவறி கீழே விழுந்து பலியானார். நர்மதா கால்வாயில் குதிக்கும் போது செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் ராஜ்கோட்டில் உயிரிழந்தனர். இதேபோல் இந்த ஆண்டும் பல உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த மாதம் கூட மும்பையில் இருவர் செல்பி யால் உயிரிழந்துள்ளனர். இதனால், செல்பி மோகத்தை கட்டுக்குள் கொண்டுவர மும்பை போலீஸ் 16 இடங்களை கண்டறிந்து அங்கு செல்பி எடுப்பதை தடை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .