September 27, 2021

செல்ஃபீ டிவைஸ் வேணுமா?

செல்ஃபீ என்னும் தன்னை தானே புகைப்படம் எடுத்து கொள்ளும் ஒரு கல்ச்சர் இப்போது காட்டு தீ போல பரவி வரும் இந்த காலகட்டதில் தன்னை தானே ஃபோட்டோ எடுக்க முன் பக்க கேமரா ஃபோனை இப்போது நிறைய பேர் விரும்பி வாங்குகின்றனர். இதை உணர்ந்த பானசோனிக் நிறுவனம் இந்திய மார்கெட்டுக்காக Eluga S என்னும் செல்ஃபிக்கென்றே ஒரு சிறப்பு ஃபோனை மார்கெட்டில் 11,000 ரூபாய்க்கு இறக்கினர். சிலரோ முன் பக்கம் வைத்த கேமராவின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும் பின் பக்க கேமராவை வைத்து செல்ஃபியே எடுக்க முடியாத என கேள்வி கேட்ட நேரத்தில் தான் என் மனதில் ஒரு ஐடியா பிறந்தது!!!!
ravi selfi device
இதற்க்கென்று சிம்பிளாய் ஏதாவது செய்தால் என்ன? அப்போது மார்க்கெட் ரிஸர்ச் செய்தபோது ஏபிஷட்டர்3 என்னும் ஒரு புது கருவியை மலேஷியாவை தலைமையிடமாக கொண்டு சைனா கம்பெனி செல்ஃபி எடுக்க குருப்பி என கேமராவை ரிமோட் முறையில் க்ளிக் செய்ய உபகரணம் கண்டுப்பிடித்தும் அது மார்கெட்டில் செல்ஃப் எடுக்காமல் போன காரணம் ஆன்ட்ராயிட் / ஆப்பிள் இதற்க்கு டிஜிட்டல் சர்டிஃபிக்கேட் அளிக்காமல் இருந்தது தான். மிக குறைந்த சில பேர் இதை வாங்கினாலும் – ப்ளூடூத் சின்க்கில் “தெரியாத உபகரணம் – unknown device” என்று வந்த காரணத்தினால் இன்ஸ்டால் செய்ய தயங்கினர்.
பல ஃபோன்களில் வேலை செய்யாமல் போனது – இதை சரிபடுத்த முனைந்த போது என்னை அனுகினர். இதனை அவர்கள் ஆன்ட்ராயிட் மார்கெட்டுக்கும் மட்டும் தான் டார்கெட் செய்த சமயத்தில் ஆப்பிளுடன் நம்மின் ரிலேஷன்ஷிப் நன்றாக இருந்ததால் இந்த கம்பெனியை நான் வாங்க முனைந்து வாங்கியும் விட்டேன்.

இந்த கம்பெனி இதே போல் மொபைலுக்கு சார்ஜ் செய்யும் பவர் பேங் உட்பட பல உபகரணங்கள் தயாரிக்கும் கம்பெனி – அதனால் மாதா மாதம் ஒரு பொருளை லான்ச் செய்ய போகிறேன். இது முழுக்க முழுக்க ப்ளூ டூத் முலம் வேலை செய்யும். ஃபோட்டோ எடுக்க மட்டுமல்ல வால்யூம் குறைக்க கூட்ட என நிறைய விஷயங்களுக்கு இந்த செல்ஃபி மாற்றி அமைத்து இதை ஆப்பிள் மற்றூம் அனைத்து ஆன்ட்ராயிட் ஃபோன் மற்றும் சில ப்ளூ டூத் கொண்ட ஃபோன்களுக்கு அதிகாரபூர்வ டிஜிட்டல் சர்டிஃபிக்கேட்டும் வாங்கி இப்போ ரெடி.

இப்போது இதை மைஸ்கேன் கஸ்டமர்ஸ் அனைவருக்கும் இலவசமாய் வழங்கப்படும். மற்றபடி இதை நாங்கள் சில்லரை விற்பனையான ரீட்டெயில் முறையில் விற்பதில்லை. இதனை மைஸ்கேன் டீலர்களிடம் நீங்கள் தனியாக வாங்க முடியும். மற்றபடி இதை அனைத்து இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய ஆர்வம் உள்ளவர்கள் – இந்த மின்னஞ்சலில் ([email protected]) தொடர்பு கொள்ளவும் (குறைந்தது 1000 எண்ணிக்கை) அதற்க்கு கீழ் தேவைப்படுமெனில் ஏற்கனவே உள்ள டீலர்களை அனுகவும். ஆனால் 100 சதவிகித லாபம் கொண்ட பொருள் இந்த ஏபிஷட்டர்3. இது எப்படி வேலை செய்யும் என பார்க்க இங்கே சொடுக்கவும்.http://abshutter3.com/howitworks.html

இதை ஐந்து பேருக்கு இலவசமாய் கொடுக்கவுள்ளேன் இதை இலவசமாய் பெற நீங்க செய்ய வேண்டியது சிம்பிளாய் – எதாவது ஒரு வினேதமான செல்ஃபியை இந்தhttps://www.facebook.com/myscanglobal பக்கத்தில் நீங்கள் அப்லோட் செய்ய வேண்டும். 5 டிசம்பர் 2014க்குள் செய்யும் ஒரு 5 செல்ஃபி புகைப்படங்களுக்கு இது எங்கள் செலவில் உங்கள் இல்லத்துக்கே அனுப்பி வைக்கபடும். இந்திய முகவரிகளுக்கு மட்டுமே இது அனுப்பி வைக்கபடும். என்சாய் மக்களே.

 

SELFIE – Launch from today